Veera Serial: விரட்டிய ராமச்சந்திரன்! சேர்ந்து வாழ மறுக்கும் வீரா! பரிதாப நிலையில் மாறன் - வீரா சீரியலில் இன்று இதுதான்!
தாலி கட்டிய மாறனுடன் சேர்ந்து வாழ வீரா மறுத்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு வீரா சீரியலில் எழுந்துள்ளது.
தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் வீரா தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மாறனை விரட்டிய ராமச்சந்திரன்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாறன் வீரா கழுத்தில் தாலியை கட்ட அதை பார்த்து ராமசந்திரன், கண்மணி ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். மாறன் வீரா கழுத்தில் தாலி கட்டியதால் ராமச்சந்திரன் அவனை போட்டு அடித்து வள்ளியையும் சேர்த்து திட்டுகிறார். இனிமே தனக்கும், மாறனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இவன் வீட்டு வாசற்படியை மிதிக்கவே கூடாது என்று கோபத்தில் கூறுகிறார்.
நான் முக்கியம்னு நினைக்கிறவங்க இப்போவே என் கூட வந்துடுங்க, இல்லனா அவனோடவே போய்டுங்க என்று ராமச்சந்திரன் கிளம்ப வள்ளி, ராகவன் என எல்லாரும், ராமச்சந்திரனுடன் கிளம்பி விடுகின்றனர்.
சூர்யா மட்டுமே மாறனுடன் நிற்கிறாள். நீயும் வீராவும் நல்லபடியா வாழ்வீங்க, விருந்துக்கு வீட்டிற்கு வாங்க என்று சொல்லி விட்டு கிளம்பி செல்கிறாள். தனி மரமாக நிற்கும் மாறன் வெளியே வர ஆட்டோக்காரர்கள் வாழ்த்து சொல்கின்றனர். இதையடுத்து அவன் வீட்டு வாசலில் வந்து நிற்க, வள்ளி உள்ளே இருந்து கல் எடுத்து அடித்து வீரா இல்லாமல் வர கூடாது என்று துரத்தி விடுகிறாள்.
சேர்ந்து வாழ மறுக்கும் வீரா:
இதனால் அவன் வீரா வீட்டிற்கு கிளம்பி வருகிறான், இங்கே கண்மணி பயங்கர கோபத்தில் இருக்கிறாள். மாறன் மீது போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்ல, வீரா இது மாறன் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல, ராமசந்திரன் சார் கௌரவமும் இருக்கு. அவன் மேல கம்பளைண்ட் எல்லாம் வேண்டாம். அவனோட நான் சேர்ந்து வாழ போறதும் இல்ல என்று சொல்கிறாள்.
இந்த நேரத்தில் மாறன் வீட்டு வாசலில் வந்து நிற்க கண்மணி அவனை பார்த்ததும் கண்டபடி திட்டி வெளியே போக சொல்ல, மாறன் நிற்கும் இடத்தை விட்டு நகராமல் நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பதை இன்றைய எபிசோடில் காணலாம். இந்த தொடர் விறுவிறுப்பாக செல்லும் நிலையில் வீராவிற்கும், மாறனுக்கும் இடையே திருமணம் நடைபெற்றிருப்பதே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி என்ன நடக்கப்போகிறது? என்ற விறுவிறுப்பு ஏற்பட்டுள்து.