Sita Raman: மணக்கோலத்தில் சீதாவுடன் வந்து இறங்கிய ராம்.. மகாலட்சுமி கொடுத்த அதிர்ச்சி .. இன்றைய எபிசோட் அப்டேட்..!
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர்.

சீதா ராமன் சீரியலில் ராம், சீதாவுடன் மணக்கோலத்தில் வீட்டுக்கு வருவதைப் பார்த்து மகாலட்சுமி அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
சீதாராமன் சீரியல்:
தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் சேனலில் அடுத்ததாக சீதா ராமன் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?
இன்றைய எபிசோடில் ராம் மற்றும் சீதா என இருவருக்கும் திருமணம் நடந்து முடிகிறது. அதன் பிறகு இருவரும் மகாலட்சுமி வீட்டிற்கு கிளம்பி செல்கிறனர். மறுபக்கம் மதுமிதா திருமணம் முடிந்த கையோடு சூர்யா வீட்டிற்கு வருகிறார். ஆனால் சூர்யா குடும்பம் அவனே வேலை இல்லாமல் இருக்கும் போது, அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க எதுக்கு வந்த என திட்டி அவமானப்படுத்துகின்றனர்.
இந்தபக்கம் மகாலட்சுமி ராம், மதுமிதாவை திருமண கோலத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறார். ஆனால் ராம், சீதாவுடன் வந்து இறங்குகிறான். இதை பார்த்து மகாலட்சுமி அதிர்ச்சி அடைகிறாள்.
மேலும் மகாலட்சுமி கோபமாக சீதாவை பார்த்து பேசுகிறார். இந்த வீட்டு மருமகளாக உனக்கு என்ன தகுதி இருக்கு? என கேட்கும் அவர், சொத்து இல்லனாலும் உங்க அக்காவோட அழகுக்காக தான் உங்க வீட்ல சம்மந்தம் பேசினோம். உன்கிட்ட அழகும் இல்லை, இந்த வீட்டு மருமகளாக தகுதியும் இல்லை என கத்துகிறாள். இதனையடுத்து ராம் கட்டிய தாலியை கழட்டி கொடுத்து விட்டு சீதாவை வீட்டை விட்டு வெளியே போக மகாலட்சுமி சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

