Sita Raman: மதுமிதா செய்த சம்பவம்.. திடீர் மணப்பெண்ணாக மாறிய சீதா.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர்.

சீதா ராமன் சீரியலில் ராம் தன்னுடைய அம்மாவுக்காக விருப்பம் இல்லாமல் சீதாவை திருமணம் செய்ய முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
சீதாராமன் சீரியல்:
தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் சேனலில் அடுத்ததாக சீதா ராமன் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
மணப்பெண்ணான சீதா
இன்றைய எபிசோட்டில் மதுமிதா மணக்கோலத்தில் சூர்யாவுடன் வீட்டுக்கு வருவதை பார்த்து ராஜசேகர் அதிர்ச்சியடைகிறார் உடனே துப்பாக்கியை எடுத்து மதுமிதாவை கொலை செய்யப்போக, குடும்பத்தினர் அனைவரும் அவரை தடுத்து சமாதானம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து மதுமிதா குடும்பம் மானத்தை வாங்கி விட்டதாக சொல்லி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ராஜசேகர் குண்டை தூக்கி போட அனைவரும் கவலையடைகின்றனர்.
தொடர்ந்து ராஜசேகரனும், அவரது மனைவியும் மதுமிதாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்கள். இதனால் சூர்யா, மதுமிதா இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். நிலைமை இப்படியிருக்கையில் ராமின் மாமா மகாலட்சுமி மீது இருக்கும் கோபத்தை தீர்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார்.
விபத்தில் சிக்கிய மகாலட்சுமியும் மேலும் சில உறவினர்களும் திருமணத்திற்கு வராத நிலையில் இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ராமிடம் பேசுகிறார். அப்போது, “இந்த கல்யாணம் நடக்கலன்னா மகாலட்சுமி இறந்து போனாலும் போய்டுவா” என சொல்லி சீதாவை கல்யாணம் செய்ய சொல்கிறார். ராமும் தன்னுடைய அம்மாவுக்காக விருப்பம் இல்லாமல் சீதாவை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான்.
இதனையடுத்து ராமின் மாமா இந்த விஷயத்தை ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவியிடம் சொல்கிறார். அவர்களும் குடும்ப மானத்தை காப்பாற்ற இது நல்ல வழி என சொல்லி சீதாவை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கின்றனர். பிறகு ராம், சீதா என இருவரும் மனமில்லாமல் மணமேடையில் வந்து உட்காரும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

