Sita Raman: மதுமிதாவை பெண் பார்க்க வந்த மகாலட்சுமி.. சீதாவுக்கு நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்.. இன்றைய அப்டேட் இதோ..!
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர்.
சீதா ராமன் சீரியலில் சூர்யா மதுமிதாவை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
சீதாராமன் சீரியல்:
தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் சேனலில் அடுத்ததாக சீதா ராமன் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
நேற்றைய எபிசோடில், மகாலட்சுமி மதுமிதாவின் அப்பா போலீஸ் என தெரிந்து ஸ்டேஷனுக்கு சென்று பெண் கேட்க செல்கிறார். இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி மதுமிதா வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறாள். அதேசமயம் மதுமிதாவை ரெஜிஸ்டர் ஆபிஸில் அவரது காதலன் திருமணம் செய்ய வருமாறு அழைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இன்றைய எபிசோட் இதோ..
இன்றைய எபிசோடில் சீதாவின் வீட்டில் மகாலட்சுமி மதுமிதாவை பெண் பார்க்க வந்து காத்துக் கொண்டிருக்கிறாள். மறுபக்கம் மதுமிதாவின் காதலன் சூர்யா மதுமிதாவை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறான். ஆனால் மதுமிதா நான் கண்டிப்பாக அப்பாவிடம் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி விடுவேன், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என சொல்லி வீட்டுக்கு வருகிறாள்.
இதனிடையே மதுமிதாவின் வீட்டில் உன்னைப் பார்த்தால் கல்யாணம் நின்றுவிடும் என சொல்லும் சீதாவின் சித்தி அவளை ஒரு ரூமில் பூட்டி வைக்கிறார். சீதா தன்னுடைய அக்காவுக்காக டிரஸ் தைத்து கொண்டு இருக்கிறாள்.
சூர்யாவிடம் கல்யாணம் வேண்டாம் என சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் மதுமிதா வீட்டில் தன்னை பெண் பார்க்க வந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள். அவளது குடும்பத்தார் வீட்டுக்கு வந்ததும் அவளை தயார் செய்து கூட்டி வந்து அனைவர் முன்னிலையிலும் உட்கார வைக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.