(Source: ECI/ABP News/ABP Majha)
Seetha Raman: சீதாவுக்கு ஷாக் கொடுத்த ராம் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் சில விஷயங்களை வைத்து சீதா சுடவில்லை என கண்டு பிடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சீதா மகாவின் போட்டோவிற்கு மாலை போட அதை பார்த்த அர்ச்சனா நீ எதுக்கு மகா போட்டோவிற்கு மாலை போடுற சண்டை போட அர்ச்சனாவிற்கும் உமாவிற்கும் வாக்குவாதம் உருவாகிறது. அங்கு வரும் ராம் உனக்கு குற்றஉணர்ச்சியே கிடையாதா? நீ எதுக்கு மாலை போடுற என சீதாவிடம் கோப்படுகிறான்.
இதை கேட்ட ராஜசேகர் கோபமாகி இனிமே நீ இங்க இருக்க வேண்டாம், உனக்குன்னு இருந்த ஒரு உறவும் இப்போ இல்ல என ஊருக்கு கிளம்பி வர சொல்ல சீதா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாள். இதற்கிடையில் ரவுடி சுபாஷ்க்கு போன் செய்ய சுபாஷ் கட் செய்து விடுகிறான்.
View this post on Instagram
திரும்ப திரும்ப போன் பண்ண தனியா வந்த சுபாஷ் ரவுடிக்கு போன் போட்டு திட்ட அவன் பணத்தை கேட்கிறான். சுபாஷ் பதில் எதுவும் சொல்லாமல் போனை கட் பண்ணி விடுகிறான், அடுத்து இரவு நேரத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்த சுபாஷை சுட துணிய சுபாஷ் பயந்து போகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Vijay : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் : வாழ்த்து சொன்ன திரை பிரபலங்கள்!
HBD Simbu : மன்மதன்.. வல்லவன்.. இளமை மாறாத நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று!
Shanthi Priya: வெற்றிமாறன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ஹீரோயின்! குஷியில் 80'ஸ் கிட்ஸ்!