Sandhya Ragam: மாயா கொடுத்த லிஸ்ட்.. ஷாக் கொடுத்த ரகுராம்.. சந்தியா ராகம் சீரியலில் நடந்தது என்ன?
Sandhya Ragam Serial Today Update: சந்தியா ராகம் சீரியல் இன்றைய அப்டேட் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரகுராம் மாயா தனலட்சுமி தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாயா தனக்கு தேவையான காஸ்மெட்டிக் பொருட்களை லிஸ்ட் போட்டு அதை குட்டி பையன் அப்புவிடம் கொடுத்து ஜானகியிடம் கொடுக்க சொல்கிறாள். அவனும் அதை கொண்டு செல்ல, என்ன இருக்குன்னு அவரை எல்லோரும் படிக்க சொல்கின்றனர்.
அவன் தப்பு தப்பாக படிக்க அவனது அம்மா எல்லோருக்கும் விளக்கத்தை சொல்ல ரகுராம் வந்துவிட ஜானகி அந்த லெட்டரை வாங்கி மறைத்து விடுகிறார். ரகுராம் என்ன லெட்டர் என்று கேட்க ஜானகி அதை எடுத்து நீட்ட காற்றில் பறந்து போய் தண்ணீரில் விழுந்து எல்லாம் அழிந்து விடுகிறது.
View this post on Instagram
படித்தவர்களுக்கு அதில் எழுதி இருப்பது என்னன்னு தெரியும்ல சொல்லுங்க என்று கேட்க மாயா காஸ்மெட்டிக் பொருட்கள் லிஸ்ட் எழுதி கொடுத்திருப்பதாக சொல்ல இந்த வீட்டுக்குள் காஸ்மெட்டிக் பொருட்கள் எதுவும் வரக்கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
அதற்கு அடுத்ததாக மாயா புவனேஸ்வரிக்கு போன் செய்து காஸ்மெட்டிக் பொருட்கள் வேண்டும் வாங்கிட்டு சொல்லுங்க நானே வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்கிறாள். அதற்கு அடுத்ததாக புவனேஸ்வரி ரகுராம் வீட்டிற்கு வர சீனு அதை வெளியே சென்று இருக்கும் ரகுராமிடம் சொல்ல கிளம்புகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
IND Vs AUS 3rd T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஆஸ்திரேலியா உடன் இன்று 3வது டி20 போட்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

