Maari: ஜாஸ்மின் நெக்லஸை திருடிய ஸ்ரீஜா.. மாரி மீது விழுந்த பழி...அடுத்து என்ன நடக்கும்? - இன்றைய எபிசோட் இதோ..!
மாரி சீரியலில் ஜாஸ்மின் நெக்லஸை ஸ்ரீஜா திருடிய நிலையில் பழி மாரி மேல் விழும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
மாரி சீரியலில் ஜாஸ்மின் நெக்லஸை ஸ்ரீஜா திருடிய நிலையில் பழி மாரி மேல் விழும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் ஜாஸ்மினுக்கு தாரா பரிசளித்த நிலையில், சூர்யா மாரிக்கு நகை வாங்கி பரிசளிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. இன்றைய எபிசோடில் இரவு தாரா சங்கரபாண்டி மற்றும் அரவிந்திடம் நிச்சயதார்த்த வேலைகள் சரியாக நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஹாசினி தும்மல் போடுகிறார்.
இதைக்கண்டு தாரா கடுப்பாகும் நிலையில் மீண்டும் ஹாசினி தும்மல் போட தாரா ஜாஸ்மின் டென்ஷனாகிறார்கள். இந்த சமயத்தில் ஸ்ரீஜா யாருக்கும் தெரியாமல் ஜாஸ்மின் ரூமில் உள்ள நெக்லஸை எடுத்து மாரி சூட்கேஸில் வைத்து விடுகிறார். அதேசமயம் தான் வாங்கி வந்த நகையை சூர்யா மாரியிடம் காட்டி எடுத்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் வேண்டாம் என்று மறுக்கும் மாரி, இந்த பணத்துக்காக நகைக்காகவும் நான் உங்க வீட்டுக்கு வரல. உங்க உயிரை காப்பாற்ற தான் நான் வந்து இருக்கேன் என சூர்யாவிடம் மாரி சொல்கிறார்.
View this post on Instagram
மேலும் இன்னைக்கு நீங்க வாங்கி தருவீங்க. நாளைக்கு ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டிட்டீங்கன்னா எனக்கு யார் வாங்கி தருவா?. அதனால தயவு செய்து எனக்கு வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டு போக சூர்யா ஃபீல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா தினேஷிடம், தனக்கும் இந்த மாதிரி நெக்லஸ் வாங்கித்தருமாறு கேட்கிறார். உடனே தினேஷ் முதல்ல நீ சரியா இரு. எங்க அம்மா தாரா கூட எல்லாம் சேராமல் இரு. அதுக்கு அப்புறம் நான் வாங்கி தரேன் என்று திட்டிவிட்டு போக ஸ்ரீஜா கடுப்பாகிறாள்.
மறுநாள் காலை நிச்சயதார்த்த ஏற்பாடுகளுக்காக அனைத்து வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மாரியிடம் தாரா, சங்கர பாண்டி, அரவிந்த் மூவரும் வேலை வாங்குவதை பார்த்து சூர்யா ஃபீல் செய்கிறான். பின்னர் ரூமில் மாரியிடம் சூர்யா எதற்காக இந்த மாதிரி வேலைகள் செய்கிறாய் என்று சொல்ல எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்லை சந்தோஷமா தான் அந்த வேலையை செய்கிறேன் என்று மாரி பதிலளிக்கிறார்.
இந்த பக்கம் ஜாஸ்மின் ரூமில் நிச்சயதார்த்ததுக்கு ரெடியாகி நெக்லஸை பார்க்க அது இல்லாமல் இருப்பதைக் கண்டு ஷாக் ஆகிறார். பின்னர் ஹாலில் வந்து தாராவிடம் விஷயத்தை சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஜாஸ்மின் மாரி தான் எடுத்து இருக்காங்க என்று குற்றம் சாட்ட மாரி அதிர்ச்சி அடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.