Karthigai Deepam: தீபாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் கார்த்திக் ரூபஸ்ரீயை சந்தித்து நீ ஆள் வச்சு தான் பாடுற என்பது எனக்கு தெரியும் என்ற விஷயத்தை சொல்லி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கோகிலா அதிர்ச்சி:
நீ பண்றது ரொம்ப ரொம்ப தப்பு வேற ஒருத்தருடைய திறமையை உன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்துவது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா என திட்டுகிறான். பிறகு அந்த உண்மையான குரலுக்கு சொந்தக்காரி யார் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கொஞ்ச நாள் டைம் தரேன் அதுக்குள்ள நீங்களா சொல்லிடுங்க நான் கண்டுபிடிச்சா அசிங்கமா போயிடும் என்று எச்சரிக்க கோகிலா இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.
அதனைத் தொடர்ந்து ரூபஸ்ரீ ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல தீபா இப்படி ஒரு ஏமாற்று வேலை பண்ணிக்கிட்டு இருக்காளா? இந்த பிரச்சினையை நானே தீர்த்து வைக்கிறேன் என சொல்லி போனை வைக்கிறாள்.பிறகு தீபாவுக்கு போன் செய்யும் ஐஸ்வர்யா உன்னுடைய நேர்மையை பாராட்டி பரிசு தரணும் நான் நாளைக்கு அங்கு ஊருக்கு வரேன் என்று சொல்ல தீபா குழப்பம் அடைகிறாள். பிறகு மைதிலி இடமும் இதைப்பற்றி பேச அவளும் குழப்பமடைய ஐஸ்வர்யாவுக்கு என்ன விஷயம் தெரிந்தது என தெரியாமல் தவிக்கிறாள்.
தீபா வீட்டுக்கு செல்லும் ஐஸ்வர்யா
அதோடு நிறுத்தாமல் கார்த்திக்கும் போன் செய்து தீபா இவ்வளவு நாளா உங்ககிட்ட ஒரு பெரிய உண்மைய மறைச்சு ஏமாத்திட்டு இருந்து இருக்கா அதை நான் நேர்ல வந்து நிரூபிக்கிறேன் என்று சொல்லும் ஐஸ்வர்யா மறுநாள் தீபா வீட்டுக்கு வந்து இறங்க தீபா, மைதிலி ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.