Karthigai Deepam: சம்பந்தியை கடத்திய சாமுண்டீஸ்வரி! ரேவதி புருஷனா கார்த்தி? ஷாக்கில் மைதிலி
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று அபிராமி கடத்தப்பட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கடத்தப்பட கோவில் நகை திருடப்பட்ட நிலையில் இன்று நடக்கபோவது என்ன? என்பது குறித்து பபார்க்கலாம் வாங்க.
கார்த்தியின் அம்மா அபிராமி கடத்தல்:
அதாவது, கார்த்திக் வீட்டிற்கு பின்பக்கம் கொள்ளையர்களால் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நகையை கண்டுபிடித்து கொண்டு மீண்டும் வருகிறான். அடுத்து அந்த நகையை கோவிலுக்கு எடுத்து கொண்டு கிளம்புகின்றனர்.
இன்னொரு பக்கம் சாமுண்டீஸ்வரி சந்திரகலா ஆகியோர் கோவிலில் காத்திருக்கும் நிலையில், கார்த்தியின் அம்மாவான அபிராமியை ரவுடிகள் கடத்தி சென்று ஒரு குடோனில் அடைகின்றனர். அடுத்து இளையஜரா சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிடம் வந்து பேச்சு கொடுக்கிறான்.
கோயிலுக்கு வரும் அபிராமி:
நகையை கொண்டு வரும் போது நீ கூட வர மாட்டியா என்று சாமுண்டீஸ்வரி கேட்க, நான் அதுக்கெல்லாம் இருக்கணும்னு அவசியம் இல்ல என்று சொல்கிறான். இதையடுத்து கோவில் குளத்தில் இருந்து கும்பாபிஷேகத்திற்காக தண்ணீர் கொண்டு வருகின்றனர்.
அதை தொடர்ந்து அபிராமி கடத்தப்பட்டது அறியாத காரணத்தால் கார்த்திக், ராஜராஜன் ஆகியோர் யாக பூஜையில் அமர்ந்திருக்க இங்கே சாமுண்டீஸ்வரி ரவுடிககுக்கு போன் செய்து அபிராமியை சரியான நேரத்துக்கு கோவிலுக்கு அழைத்து வர சொல்கிறாள்.
வீட்டிற்கு கிளம்பிய மைதிலி:
இதை ஒட்டு கேட்டு விடும் அபிராமி குடோனில் இருந்து தப்பி வருகிறாள். கோவிலில் ரேவதி மைதிலியிடம் என்னுடைய கணவனை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கார்த்தியை கூப்பிட போக, மைதிலி ரேவதியின் புருஷன் கார்த்திக் தான் என அறிந்து அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறாள்.
அபிராமி தப்பி ஓடி வர சந்திரகலா விஷயம் அறிந்து அவளை விட்டுடாதீங்க, எப்படியாவது பிடிங்க என்று ஆர்டர் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை இன்று காணுங்கள்.





















