கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரயலில் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தும் சாமுண்டீஸ்ரியிடம் ரேவதி ஒரு நிபந்தனை விதிக்கும் வகையில் என்ன நடக்கப்போகிறது? என்று கீழே காணலாம்.
தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக திகழ்வது ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கல்யாண பேச்சால் குழப்பத்தால் ரேவதி:
அதாவது, ரேவதி கல்யாணம் குறித்த பேச்சால் அப்செட்டாகி ரூமுக்குள் இருக்க, அம்மா கூப்பிட்டதாக சொல்லி சுவாதி ரேவதியை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதி டல்லாக இருப்பதை பார்த்து "என்னாச்சு? என்ன பிரச்சனை?" என்று விசாரிக்க ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறாள். அடுத்து சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்கார, அவளது மகள்கள் "யாரும் சாப்பிடவில்லை" என்று தெரிய வந்து, சாப்பாடு எடுத்து கொண்டு வந்து "என் மேலே இருக்க கோபத்தை சாப்பாட்டு மேலே எதுக்கு காட்டுறீங்க?" என்று கேட்கிறாள்.
மேலும் "திடீரென கல்யாணம் என்று சொன்னால் யாருக்காக இருந்தாலும் பயமும் கோபமும் வர தான் செய்யும். ஒரு நாள் டைம் எடுத்துக்கோ, நாளைக்கு உன்னுடைய முடிவை சொல்லு" என்று சொல்ல, ரேவதி இதுக்கு என்ன பதில் சொல்வது? என தெரியாமல் முழிக்கிறாள்.
கண்டிஷன் போடும் ரேவதி:
அடுத்து கார்த்திக் ரேவதி ரூம் கதவை தட்டி, "கல்யாணத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்கிறான். ரேவதி என்னுடைய பெர்சனல் விஷயத்தில் "நீ எதுக்கு தலையிடுற" என்று கோபப்படுகிறாள். "காதல் ஏதாவது இருக்கா? அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க" என்று சொல்ல, ரேவதி பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்.
அம்மாவுக்கும் அந்த குடும்பத்திற்கும் ஆகாது என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக் இவ்வளவு தானே விஷயம், உங்களுடைய காதலுக்கு நான் உதவுறேன் என்று வாக்கு கொடுக்கிறான். அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி ரேவதியை கூப்பிட்டு "உன்னுடைய முடிவு என்ன?" என்று கேட்க, "கல்யாணத்தில் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.. நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா.. நீங்க அப்பாவை அவங்க அப்பா அம்மாவை பார்க்க விடணும்" என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.