Karthigai Deepam: மகேஷிற்கு பதில் கணேஷ்! கல்யாணப் பத்திரிகையால் ஷாக்கான ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deeapam: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் ஆகும். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் தாத்தாவை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் சாமுண்டேஸ்வரி குடும்பத்தை சமாளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இருக்குடா ஆப்பு:
அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு பேசி கொண்டிருக்கும் போது, ஒருவன் ரேவதியின் கல்யாண பத்திரிக்கை தயாராகி விட்டதாக சொல்லி கொண்டு வந்து கொடுக்கிறான். இதை பார்த்த சந்திரகலா "உனக்கு இப்போ இருக்குடா ஆப்பு" என மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறாள்.
அடுத்ததாக ராஜராஜன் பத்திரிகையை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்து வரலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியும் நல்ல விஷயம் அப்படியே செய்யலாம் என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் சந்திரகலா பத்திரிக்கை எப்படி வந்து இருக்குனு பார்க்கணும்? என்று சொல்லி பிரித்து பார்க்கட்டுமா? என அனுமதி கேட்கிறாள்.
ஷாக்கில் ரேவதி:
சாமுண்டீஸ்வரி இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி கேட்குற, பிரித்து பாரு? என்று சொல்ல சந்திரகலா பிரித்து பார்த்து மகேஷ் என்ற பெயருக்கு பதிலாக கணேஷ் என்று இருக்கிறது. ட்ரைவர் தான் அந்த கணேஷ் போல, ரேவதி கழுத்தில் தாலி கட்ட தான் இப்படி செய்து இருக்கிறான் என்று சொல்ல ரேவதி ஷாக் ஆகிறாள்.
கார்த்திக் "கணேஷ் என் பெயர் இல்லை" என்று சொல்ல, சந்திரகலா "அப்படினா உன் பேர் என்ன? இதுவரைக்கும் நீ பேரே சொன்னது இல்லை" என்று பிரச்சனை செய்ய கார்த்திக் அமைதியாக இருக்கிறான். சந்திரகலா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்க, மயில்வாகனம் "அவனை அவன் ஊர்ல எல்லாரும் கிங்குனு தான் கூப்பிடுவாங்கலாம். அவன் பேர் ராஜா" என்று சொல்கிறான்.
ரேவதியை மிஸ் செய்யும் குழந்தை:
அடுத்து ரேவதி மதர்க்கு போன் செய்து குழந்தை தீபாவை குறித்து விசாரிக்கிறாள். மதரும் "குழந்தையை சீக்கிரம் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க, அவளும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாள்" என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

