Karthigai Deepam: வாரிசாக வந்து நிற்பாரா கார்த்திக்? துர்காவிற்கும் நவீனுக்கும் கல்யாணம் நடக்குமா?
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் சந்திரகலா கோவிலை பூட்ட வைத்து அபிராமியின் வாரிசுகள் வந்து தான் கோவிலை திறக்க வேண்டும் என்று செக் வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையைச் சொல்வாரா கார்த்திக்?
அதாவது, ஊர்க்காரர்கள் இந்த பிரச்சனையின் போது நீங்க இருக்க வேண்டும் என்று சாமுண்டீஸ்வரி அழைக்க சந்திரகலா தலைவர் என்ற முறையில் நீ போக வேண்டும் என்று ஏற்றி விட்ட அவளை சம்மதிக்க வைக்க கார்த்திக் உண்மையை சொல்லிவிட முடிவெடுக்கிறான்.
ஆனால் ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் என இருவரும் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று அவசரப்பட வேண்டாம் என்று சொல்கின்றனர். அடுத்ததாக துர்காவின் கல்யாண பத்திரிக்கையை கார்த்திக் கொண்டு வர சந்திரகலா அதில் நவீனின் பெயர் இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள்.
கார்த்திக்கிற்கு பதில் இளையராஜா:
பத்திரிக்கை பிரித்துக் காட்ட சொல்ல கார்த்தியும் பிரித்து காட்ட அதில் மாப்பிள்ளையின் பெயர் இருக்கிறது. பிறகு பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய துர்கா எனக்கும் நவீனுக்கும் கல்யாணம் நடக்குமா? என்று வருத்தப்பட கார்த்திக் பத்திரிகையில் நவீன் என்ற பெயர் தான் இருக்கிறது என்பதை சொல்கிறான். பூஜை அறையிலும் இந்த ரெண்டு பேர் இருக்கும் பத்திரிக்கைக்கு தான் பூஜை செய்ததாக சொல்கிறான்.
தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி அருண், ஆனந்துடன் காத்துக் கொண்டிருக்க கார்த்திக் வந்துவிடுவதாக சொல்கிறான். அவனுக்கு பதிலாக இளையராஜாவை களத்தில் இறக்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்K.





















