Idhayam Serial: ஆதி - பாரதி இடையே வந்த மோதல்.. இதயம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் மணி சாரதாவை அடிக்க ஆதி மணியை அடிக்க என பிரச்சனை பெரிதாக சாரதா இந்த கல்யாணம் நடக்காது என ஆதியை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஆதி சாரதாவிடம் எனக்கு கல்யாணம் இன்னும் ஒன்னு நடந்த அது பாரதி கூட மட்டும்தான் என்று உறுதியாக சொல்ல மறுபக்கம் மரகதம் மணி ஆகியோர் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று பேச ரத்னம் இரண்டு பக்கமும் தப்பு இருக்கு பேசி தீர்வு காணலாம் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து அறிவு தன்னுடைய மகள் ஸ்வேதாவுக்கு போன் போட்டு நடந்ததை சொல்லி இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்காது நீ கவலைப்படாத என்று சொல்கிறார். பிறகு ஆதி பாரதிக்கு போன் பண்ணு தமிழ் படித்துக் கொண்டிருப்பதால் பாரதி போனை கட் பண்ணி விடுகிறாள்.
ஆதி திரும்பத்திரும்ப போன் பண்ணு பாரதி கட் பண்ணி விட கொஞ்ச நேரம் கழித்து பாரதி ஆதிக்கு போன் பண்ணு அவன் கட் பண்ணி விடுகிறான். இதையடுத்து இருவரும் பேசிக் கொள்ளும் போது பாரதி ஆதி மேல தான் தப்பு என்று சொல்ல ஆதி எங்க அம்மாவை அடிச்சது தப்பில்லையா என்று கேள்வி கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டு போனை வைக்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்த தமிழ் பாரதி வெளியே போனதும் ஆதிக்கு போன் போட்டு என்னை விட்டு போயிடாதீங்க ஃபிரண்ட் நீங்க எனக்கு அப்பாவாக வேணும் என அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க: Siragadikka Aasai Serial: மீனாவுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்த முத்து.. எரிச்சலில் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று!