Siragadikka Aasai Serial: மீனாவுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்த முத்து.. எரிச்சலில் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai Today Episode Written Update April 22nd: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
முத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கால் பண்ணி வெளியே வர சொல்கிறார். பின் முத்து தான் வாங்கிய ஸ்கூட்டரை குடும்பத்தினரிடம் காண்பிக்கிறார். "அப்பா இனிமே இதான்பா மீனாவோட பூக்கடை. மொபைல் பூக்கடைப்பா. இந்த வண்டியிலயே பூவ வச்சி எங்க வேணுனாலும் எடுத்துட்டுப்போலாம்பா" என்று முத்து சொல்கிறார். ”வந்த பெரிய ஆர்டர்ல எனக்காக சொந்தமா கார் வாங்கி கொடுத்தவ நீ. உனக்காக நான் இதை வாங்கி கொடுத்து இருக்கேன்” என முத்து சொல்கிறார்.
”பூக்கடைக்கு அம்மாவோட பெயரை தான் வச்சோம். கார்ப்பரேஷன்காரன் கடையேவே தூக்கிட்டு போயிட்டான். அதான் இதுக்கு மீனா பெயரை வச்சி இருக்கேன்” என்கிறார் முத்து. ”ஸ்கூட்டிய கேட்டுகுள்ள கூட பார்க் பண்ணிக்கலாம். உங்கள யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்கிறார் ஸ்ருதி. மீனா அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். ”மீனா பைக் ஓட்ட தெரியுமா?” என முத்து கேட்கிறார். அதற்கு மீனா, ”பின்னாடி உட்காருங்க அப்போ தெரியும்” என்று சொல்கிறார். பின் மீனா முத்துவை வண்டியில் பின்னால் அமர வைத்து ஓட்டிச் செல்கிறார்.
”மீனா முத்துவுக்காக சொந்தமா கார் வாங்கி கொடுத்தா, ரவியும் கார் வாங்க போறேனு சொல்லிக்கிட்டு இருக்கான்” என்று மனோஜ் ரோகிணியிடம் சொல்கிறார். ”அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க” என்று ரோகிணி சொல்கிறார்.
அதற்கு மனோஜ் ”நான் வேலைக்கு போகலன்னு குத்திக் காட்டுறியா” என்று கேட்கிறார். ”எனக்கு யாராவது சப்போர்ட் பண்ணாதானே நானும் முன்னுக்கு வர முடியும். ரெண்டு தம்பிங்களும் டெவலம் ஆகி போய்கிட்டே இருக்காங்க. நான் மட்டும் தான் தண்ணியில போட்ட கல்லு மாதிரி அப்பிடியே இருக்கேன்” என்று மனோஜ் சொல்கிறார்.
”அப்போ என்னை விட உனக்கு எங்க அப்பாவோட பணம் தான் முக்கியமா?” என்று ரோகிணி கேட்கிறார். ”நீ பீல் பண்ணாத மனோஜ் உன் சூழ்நிலையும் எனக்கு புரியுது. லோன் எடுக்கணும்னா கூட நம்ம கிட்ட கொஞ்சம் டவுன் பேமண்ட் இருக்கணும்” என்று ரோகிணி சொல்கிறார். ”அங்கிள் கொடுத்த 28 லட்சம் அந்த பணம் திரும்ப நம்ம கைக்கு வரணும்” என்று ரோகிணி சொல்கிறார். ”அந்த ஜீவா தான் இப்போ நமக்கு இருக்க ஒரே வழி” என்று ரோகிணி சொல்கிறார்.
மீனா தன் வண்டியை கொண்டு வந்து தன் அம்மா மற்றும் தங்கச்சியிடம் காண்பிக்கிறார். ”எனக்கு ரோம்ப சந்தோஷமா இருக்கு” என்று மீனாவின் அம்மா சொல்கிறார். ரோகிணியும் மனோஜூம் ஒரு ட்ராவல்சுக்கு செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

