Anna Serial: போதையில் தள்ளாடும் ஷண்முகம்.. மானத்தை வாங்கிய சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் இன்று!
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகத்தை சூடாமணி என் முகத்திலேயே முழிக்காத என்று திட்டி அனுப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஷண்முகம் வீட்டிற்கு வராததால் விஷயம் அறிந்த பரணி உடன்குடிக்கு போன் போட்டு கேட்க அவன் எங்கயாச்சும் போயிருப்பான், வந்திருவான் என்று சொல்லி போனை வைத்து விட்டு கையில் வைத்திருந்த சரக்கை ஜூஸ் பாட்டிலில் ஊற்றி மிக்ஸ் செய்து சண்முகத்தை தேட கிளம்புகிறான்.
ஒரு இடத்தில ஷண்முகம் சோகமாக உட்கார்ந்திருக்க உடன்குடி என்னப்பா இங்க இருக்க வீட்டுக்கு போ பா என்று சொல்ல வீட்டுக்கு போகவே பிடிக்கல, இசக்கி ஞாபகமாகவே இருக்கு என்று வருத்தப்படுகிறான். அந்த சௌந்தரபாண்டியை சும்மா விட மாட்டேன் என்று கொந்தளிக்க உடன்குடி சரக்கு கொடுத்து இதை குடிப்பா உன் சோகம் எல்லாம் பறந்து போய்டும் என்று சொல்லி கொடுக்க சண்முகமும் அது சரக்கு என்று தெரியாமல் குடித்து விடுகிறான்.
இதனையடுத்து ஷண்முகம் குடி போதையில் அவர்களையே அடித்து துரத்தி விட்டு தள்ளாடி கொண்டு நடந்து வர ஒரு குச்சியை வைத்து காரை அடிக்க போக உள்ளே இருந்து சௌந்தரபாண்டி மற்றும் சனியன் வெளியே வருகின்றனர். ஷண்முகம் குடி போதையில் இருப்பதை ஊரே வேடிக்கை பார்க்க இதை பார்த்த சௌந்தரபாண்டி சந்தோஷப்படுகிறான்.
இவன் தான் உங்க பஞ்சாயத்து தலைவரா? இவன் தான் உங்க வருங்கால தர்மகத்தாவா என்று அவமானப்படுத்தி பேசுகிறான். மேலும் சனியனிடம் நைசா வேட்டியை உருவி விடு என்று சொல்ல அவனும் முயற்சி செய்ய ஷண்முகம் இவர்களை நடக்க விடாமல் தடுத்து விடுகிறான். அடுத்து வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி பாண்டியம்மா மற்றும் முத்துபாண்டியிடம் நடந்த விஷயத்தை சொல்லி சந்தோசப்பட இதை கேட்ட இசக்கி அயோ அண்ணா என்று பதறியடித்து ஓடி வருகிறாள்.
ஷண்முகம் குடிபோதையில் ரோட்டில் விழுந்து கிடக்க இதை பார்த்த இசக்கி அண்ணா அண்ணா என்று தலையில் அடித்து கொண்டு புலம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.