Veera Serial: தாமோதரன் குடும்பத்தால் வந்த சிக்கல்.. கல்யாணத்தில் நடக்கப்போவது என்ன? வீரா சீரிய அப்டேட்!
Veera Serial Today 8th March: “வீரா தான் எனக்காக எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க” என்று சொல்ல, ராகவன் “வீரா வீரா தான்” என்று பாராட்டுகிறான்
Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாறன் ராகவன் ரூமுக்குள் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது வள்ளி மாறனைப் பார்த்து “நீ என்னடா டிரஸ் மாத்தாம இருக்க?” என்று திட்டுகிறாள். “போய் வேட்டி சட்டையை கட்டிட்டு வா” என்று சொல்லும் வள்ளி, “ஐயையோ உனக்கான வேட்டி சட்டையை மறந்து வந்துட்டேன்” என்று சொல்ல, “பரவால்ல என்கிட்ட இன்னொன்னு இருக்கு” என்று சொல்லி வேட்டி சட்டையை எடுக்க “இது யாருடா கொடுத்தது?” என்று கேட்கிறார்.
“வீரா தான் எனக்காக எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க” என்று சொல்ல, ராகவன் “வீரா வீரா தான்” என்று பாராட்ட வள்ளி அவனை முறைக்க, “சரி நான் போய் வெளியே குளித்துவிட்டு வருகிறேன்” என்று மாறன் வெளியே வருகிறான். மாறன் வெளியில் குளித்துக் கொண்டிருக்க வீரா அங்கு வர மாறனும் நண்பனிடம் அவனை காதுபட கலாய்க்கிறாள். பிறகு மாறனிடம் “துணி நல்லா இருக்கா?” என்று கேட்க அவனும் “நல்லா தான் இருக்கு” என்று சொல்கிறான்.
அதன் பிறகு கல்யாணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தாமோதரன் குடும்பத்தினர் மண்டபத்துக்குள் வந்து இறங்குகின்றனர். அவரது மகளை மணப்பெண் போல ரெடி செய்து அழைத்து வந்திருக்கிறார். “சின்ன வயசுல என் பொண்ணுக்கும் உன் பையனுக்கும் கல்யாணம்னு பேசி முடிச்சுட்டு, இப்போ வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட வச்சா என்ன அர்த்தம்?” என்று பெரியவர்களை வைத்துக் கேட்க, பெரியவர்கள் ஒருவர் “நீயும் ஒரு பெரிய மனுஷன் தானே நீ இப்படி பண்ணலாமா?” என்று கேள்வி கேட்கின்றனர்.
இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Aranmanai 4: மாஸ் ஹீரோக்களை மிஞ்சிய சுந்தர்.சி - தமன்னா காம்போ! 5 நாள்களில் வசூலில் அசத்திய அரண்மனை 4!