(Source: ECI/ABP News/ABP Majha)
Cooku with Comali 5: குக்குகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? குக்கு வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களில் யார் டாப்?
Cooku with Comali 5: குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் குக்குகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாரம் முழுவதும் பரபரப்பாக இயக்கி வரும் மக்கள் வார இறுதி நாட்களில் தங்களின் கவலைகள் அனைத்தையும் மறந்து கொஞ்சம் நேரம் மனம் விட்டு சிறிது ரிலாக்ஸ் செய்து கொள்ளும் வகையில் மிகவும் கலகலப்பாக புது பொலிவுடன் ஒளிபரப்பாகி வருகிறது குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி.
குக் வித் கோமாளி:
கடந்த நான்கு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் வித்தியாசமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோமாளிகள் முதல் நடுவர் வரை அனைவருமே மாறிவிட்டார்கள் என்றால் இந்த கலகலப்பான நிகழ்ச்சியில் தயாரித்து வழங்கி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும் விலகி கொண்டது ரசிகர்களுக்கு சற்று கலக்கத்தை கொடுத்தது. இப்படியான சூழலில் இந்த புது குக்கு வித் கோமாளி சீசன் எப்படி இருக்க போகிறது என பல கேள்விகளுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர் ரசிகர்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மக்களுக்கு மிகவும் பழகிய ஒரு முகமே. அந்த வகையில் பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, யூடியூபர் இர்ஃபான், சூப்பர் சிங்கர் பூஜா, திவ்யா துரைசாமி, ஷாலின் ஜோயா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கலகலப்புக்கு குறைவின்றி ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் செஃப் தாமுவுடன் நடுவர் பேனலில் இணைந்துள்ளார் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்நிலையில் குக்கு வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள குக்குகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் சுஜிதா இருவருக்கும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 18000 ரூபாயும், விடிவி கணேஷ் மற்றும் யூடியூபர் இர்ஃபான் இருவரும் 15000 ரூபாயும் பெறுகிறார்கள் என கூறப்படுகிறது. அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, ஷாலின் ஜோயா ஆகியோர் ஒரு நாளைக்கு 10000 ரூபாய், திவ்யா துரைசாமி 12000, சூப்பர் சிங்கர் பூஜா ஒரு நாளைக்கு 9000 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒரு நாள் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.