மேலும் அறிய
Advertisement
Ethirneechal: அவமானப்படும் குணசேகரன் தம்பிகள்.. ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் கொடுத்த ஷாக் - இன்றைய எதிர்நீச்சலில்
Ethirneechal: குணசேகரன் பெயர் பத்திரிகையில் இல்லை என குத்தலாக பேசிய சொந்தக்காரர்களை எதிர்த்த கதிர். ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் போன் செய்து உடனடியாக வர சொல்கிறார். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் ( Ethirneechal ) தொடரின் நேற்றைய (மே 15) எபிசோடில் ஜனனி சேர்ந்து இருக்கும் புது ஆபீஸ் வெளிநாட்டு கம்பெனி என்றாலும் அதை இங்கிருந்து நடத்துபவர் வி.கே. அவரை பற்றி ஆபீசில் இருக்கும் பெண் ஜனனியிடம் பெருமையாக பேச மற்ற ஸ்டாப்ஸ் சிரித்துக் கொள்கிறார்கள்.
வி.கே ஜனனியை அழைத்து அவரை பற்றி பெருமையாக பேசுகிறார். மற்ற ஸ்டாப்ஸ்களிடம் அறிமுகம் செய்து வைக்கும் போது அதை மறைந்திருந்து திருட்டுத்தனமாக பார்த்து கொண்டு இருக்கிறார் வி.கே.
வி.கே ஜனனியை அழைத்து அவரை பற்றி பெருமையாக பேசுகிறார். மற்ற ஸ்டாப்ஸ்களிடம் அறிமுகம் செய்து வைக்கும் போது அதை மறைந்திருந்து திருட்டுத்தனமாக பார்த்து கொண்டு இருக்கிறார் வி.கே.
வீட்டில் காதுகுத்துக்கு பத்திரிகை வந்ததும் ஈஸ்வரிக்கு முதல் பத்திரிகை கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் நந்தினியும் கதிரும். கதிர் இதுவரையில் ஈஸ்வரியிடம் மரியாதை குறைவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறான். ஞானம், ரேணுகாவுக்கும் பத்திரிகை வைத்து அழைக்கிறார்கள். அந்த நேரத்தில் கரிகாலன் குரல் கேட்க "அவன் இன்னும் வீட்டை விட்டு கிளம்பவில்லையா? அவனை அடித்து விரட்டுகிறேன்" என கதிர் பாய்ந்து கொண்டு செல்ல ஈஸ்வரி அவனை சமாதானப்படுத்தி "ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது இதெல்லாம் தேவையில்லை. பிரச்சினை வர வேண்டும் என்பதற்காக தான் கரிகாலனை இங்கே அழைத்து வந்து வைத்து இருக்கிறார்" என ஈஸ்வரி சொல்ல கதிரும் சமாதானம் அடைகிறான்.
பிறகு அனைவரும் உட்கார்ந்து யார் யாருக்கெல்லாம் பத்திரிகை கொடுக்க வேண்டும் என்பது பற்றி லிஸ்ட் எழுதி கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜனனி சக்தி போன் செய்து வேளையில் சேர்ந்தது பற்றி சொல்கிறாள். வேலை எப்படி இருக்கு என அவள் சொல்லும் போது "Mr . குணசேகரன் போலவே இங்கும் ஒரு கேரக்டர் இருக்கு" என அவள் சொல்ல அதை கீழே இறங்கி வந்த குணசேகரன் கேட்டு விடுகிறார். "குணசேகரன் போன்ற ஒரு ஆள் எல்லா இடத்திலேயும் இருப்பான்" என குணசேகரன் சொல்ல அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது:
குணசேகரன் கரிகாலனையும் அவனுடைய கூட்டாளியையும் அழைத்து கொண்டு வெளியே கிளம்புகிறார். அப்போது கரிகாலன் கூட்டாளி குணசேகரனிடம் அடி வாங்குகிறான். "பாத்துகோடா உன்னேயே தூக்கி சாப்பிட்டுவிடுவான்" என கரிகாலனை எச்சரிக்கிறார் குணசேகரன். "போய் பின்னாடி உட்காருடா. மாமா பின்னாடி நான் தான் இருப்பேன்" என கரிகாலன் அவனை விரட்டுகிறான்.
ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் போன் செய்ய பதட்டமான ஈஸ்வரி ஏதாவது பிரச்சினையா? என்று கேட்கிறாள். ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு ஒரு லொகேஷன் அனுப்பி உடனடியாக அங்கே வர சொல்கிறார். ஈஸ்வரியும் கிளப்பி செல்கிறாள்.
சொந்த பந்தங்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக கதிர், நந்தினி, ரேணுகா, ஞானம் மற்றும் சக்தி செல்கிறார்கள். அப்போது போன இடத்தில் பத்திரிகையில் குணசேகரன் பெயர் இல்லையே என அந்த விருந்தாளி கேட்கிறார். "குணசேகரன் பெயரை பத்திரிகையில் போடாம விட்டு இருக்கீங்க. அவர் தானே மாப்பிள்ள உங்க குடும்பத்துக்கே விலாசம்" என சொல்ல அதை கேட்டு கடுப்பான கதிர் "யோவ் அப்படினு யார் சொன்னது? நீ வந்து கண்ணால பாத்தியா?" என சரமாரியாக அவரை திட்டி தீர்க்க அவருக்கு எதுவும் புரியவில்லை. பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் ( Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion