Ethirneechal: ஈஸ்வரியை கைநீட்டி அறைந்த குணசேகரன்... கைத்தட்டி சந்தோஷப்படும் கதிர்... எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Oct 7 Promo: வீட்டுக்கு வந்த முதல் நாளே அனைவரையும் மிரட்டி உருட்டும் குணசேகரன், ஈஸ்வரியை பளார் என அறைய, அதை கைதட்டி ரசிக்கிறான் கதிர். இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் முதல் முறையாக வேல ராமமூர்த்தி புதிய குணசேகரனாக நேற்று வீட்டில் என்ட்ரி கொடுக்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
குணசேகரன் காணாமல் போன பிறகு வீட்டுக்கு திருப்பி வருகிறார் என்பதால் மகனுக்காக விசாலாட்சி அம்மா செய்து வைத்த ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தது. மருமகள்களை ஆட்டிவைப்பதும் அதிகாரம் செய்வதும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. குணசேகரன் வீட்டுக்கு வருவதால் அவரின் தாய்மாமன் சாமியாடி வீட்டுக்கு வந்து பெரிய லெவலில் பில்ட் அப் கொடுக்கிறார். “வருபவன் பழைய குணசேகரன் இல்லை. இவன் உக்கிரமாக வந்து கொண்டு இருக்கிறான்” என சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்.
பட்டாசு வெடி பட்டையை கிளப்ப தடபுடலான வரவேற்புடன் வீட்டுக்கு வந்து இறங்குகிறார் குணசேகரன். வந்ததும் தலைமுழுகிவிட்டு தான் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார். வந்ததும் முதல் வேலையாக வீட்டுக்கு வந்து இருந்த பங்காளிகளை எல்லாம் விரட்டி அடிக்கிறார். அடுத்து அவர் டார்கெட் செய்தது வீட்டு சம்பந்திகளை. “பொண்ணை கொடுத்த வீட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கீங்க, அதனால் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டு தான் போகணும்” என உள்குத்தாக பேசுகிறார். அந்த நேரத்தில் அப்பத்தா வீட்டுக்கு வந்து அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் நந்தினியைப் பார்த்து "உன்னைய தான் வா இங்க" என மிரட்டி கூப்பிடுகிறார். தயக்கத்துடன் வந்த நந்தினியிடம் " வெளில போய் சோத்து வியாபாரம் பண்ற. அதுவும் குணசேகரன் வீட்டில இருந்துகிட்டு" என்கிறார். அதற்கு "அப்ப வெளில போய் செய்யலாமா?" என எதிர்த்து பேசுகிறாள் நந்தினி. ஏய் என அவர் மிரட்டியதும் அனைவரும் அப்படியே நடுங்குகிறார்கள்.
அடுத்து குணசேகரன் ஈஸ்வரி பக்கம் திரும்பி கதிரை அடித்ததைப் பற்றி கேட்கிறார். "ஒரு ஆம்பிளையை நீ எப்படி கை நீட்டி அடிப்ப" எனக் கேட்க, "என்னுடைய சுயமரியாதையை காப்பாத்திக்க நான் அடிச்சேன்" என ஈஸ்வரி சொல்ல, பளார் என ஈஸ்வரி கன்னத்தில் அறைந்து விடுகிறார் குணசேகரன். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய ஆனந்தத்தில் கதிர் கைதட்டி சிரிக்கிறான்.
அப்பத்தா மருமகள்களிடம் "அவன் எதையும் லேசுல விடமாட்டான்" என சொல்ல, அதைப் பற்றி தீவிரமாக யோசனை செய்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
நடிகர் மாரிமுத்துவிடம் வில்லத்தனம் இருந்தாலும் அதில் சற்று நக்கலும் நையாண்டி தனமும் கலந்து இருந்தது ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் புதிய ஆதி குணசேகரனாக வந்து இருக்கும் வேல ராமமூர்த்தியின் நடிப்பு குறை சொல்லும் வகையில் இல்லை என்றாலும் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வில்லத்தனம் தெரிகிறது. சீரியலை பார்க்கும் ரசிகர்களே அவரை பார்த்து மிரண்டு போகும் அளவுக்கு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மாரிமுத்துவின் நடிப்பை மிகவும் மிஸ் செய்வது போல உணர்கிறார்கள்.