Ethirneechal: உக்கிரமாக வந்திருக்கிறாரா குணசேகரன்? இது வேற மாதிரி இல்ல இருக்கு.. என்ன நடக்கப்போகிறது எதிர்நீச்சலில்?
Ethirneechal Oct 6: வீட்டுக்கு வந்து இறங்கிய அடுத்த நொடியே ஆட்டத்தை தொடங்கிய குணசேகரன். அவரின் செயலுக்கு பின்னால் பெரிய ஆப்பு இருக்கு என்பது புரிகிறது. இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் கண் எதிரே போலீஸ் தம்பிகளை அடித்ததை எண்ணி கவலையுடன் பேசுகிறார். என்னுடைய பலவீனத்தை தெரிந்து கொண்டு விளையாடுகிறார்கள் என கூறிக்கொண்டு இருக்கிறார். தன்னுடைய இளம் வயதில் கண்டக்டராக வேலை செய்து கொண்டு இருந்த காலகட்டம் பற்றி இனிமையான நினைவுகளை தம்பிகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
வீட்டில் குணசேகரனுக்காக காத்து கொண்டு இருக்கும் விசாலாட்சி அம்மா எதுவுமே சாப்பிடாமல் பட்டினியாக இருக்கிறார். கதிர் போன் மூலம் அண்ணனை இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவோம் என சொன்ன பிறகுதான் சந்தோஷத்தில் சாப்பிடுகிறார்.
மருமகள்களை எல்லாம் உடை மாற்றி அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரமாக பெரியவன் வருவதற்கு முன்னர் கீழே வர சொல்லி ஆர்டர் போடுகிறார் விசாலாட்சி அம்மா. நந்தினி குத்தலாக "அவங்க என்ன பொண்ணு பார்க்கவா வராங்க அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து நிக்க. ஒரு தடவை வந்து நின்னதுக்கு தான் வாழ்க்கையே நாசமா போயிருச்சு" என்கிறாள். கடுப்பான விசாலாட்சி அம்மா, பெரியவன் வரட்டும் உங்க எல்லாருக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என்கிறார்.
கதிர் குணசேகரனிடம் ஈஸ்வரி தன்னை அறைந்ததைப் பற்றி சொல்கிறான். அதைக் கேட்டு கோபப்படுவார் குணசேகரன் என பார்த்தால், ஜாலியாக காவலையா... பாடலை கேட்டு என்ஜாய் செய்து வருகிறார். அண்ணனை பார்த்து ஷாக்காகிறார்கள் கதிரும் ஞானமும். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டுக்கு வந்து இருக்கும் ஒருவர் "வருபவன் குணசேகரன் இல்ல அம்மா. ஒத்த பட சுடல உக்கிரமா வந்துகிட்டு இருக்கான்" என சொன்னதும் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
குணசேகரன் காரில் வந்து இறங்கவும் அவரைப் போய் விசாலாட்சி அம்மா வரவேற்கிறார். அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
விசாலாட்சி அம்மா ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி என மூவரையும் அழைத்து குணசேகரனுக்கு ஆரத்தி எடுக்க சொல்கிறார். அவர்கள் ஆரத்தி எடுக்க வர கையை காட்டி நிறுத்துகிறார் குணசேகரன். வீட்டுக்குள் சென்றதும் அனைவரும் கையை கட்டிக்கொண்டு அவர் முன்னாடி நிற்க ஈஸ்வரியின் அப்பா "அப்ப நாங்க கிளம்புறோம்" என்கிறார்.
"பொண்ணு கொடுத்து இந்த வீட்டுக்கு பெருமை சேர்த்தவர் நீங்க. நல்லா இருந்து உட்கார்ந்து விருந்து சாப்பிட்டு போகலாம்" என நக்கலாக சொல்கிறார் குணசேகரன். ஒன்றும் புரியாமல் ஒருவரை பார்த்து கொள்கிறார்கள். அந்த நேரம் பார்த்து அப்பத்தா வீட்டுக்கு வருகிறார். உள்ளே நுழைந்தவர் அதிர்ச்சியுடன் அங்கேயே நின்று விடுகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இது என்னடா இது வித்தியாசமான குணசேகரனா இருக்கு. ஏதோ பெரிய திட்டத்தோடு தான் குணசேகரன் வீட்டுக்குள் மறுபடியும் என்ட்ரி கொடுத்துள்ளார். அது என்ன பிளான்? இனி வரும் கதைக்களம் எப்படி நகரப் போகிறது இப்படி பல கேள்விகளுக்கு விடை அறிய ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்கள்.