Ethirneechal : இவ பொம்பளையா? அநாகரீகமாக பேசும் ஜான்சி ராணி... ஈஸ்வரியை வேவு பார்க்க ஏற்பாடு..
Ethirneechal Oct 17 :கேவலமாக பேசிய ஜான்சி ராணியை அடிக்க கை ஓங்கும் தர்ஷன். கரிகாலனை ஈஸ்வரியை வேவு பார்ப்பதற்காக பிளான் செய்யும் கதிர். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தியும் ஜனனியும் கிருஷ்ணன் மெய்யப்பனை சந்திக்க அவனுடைய ஆபிஸுக்கு செல்கிறார்கள். கிருஷ்ணன் தனது பிஏவிடம் "காதல் திருமணம் எங்கள் குடும்பத்திற்கு ஒத்துவராது" எனக் கூறிக்கொண்டு இருக்கிறார். என்ன காரணம் என கேட்டதற்கு "எங்க சித்தப்பா ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார் என்னுடைய தாத்தா. அவரின் பெயர் நாச்சியப்பன். எங்கள் சித்தப்பாவையும் சரி, அவர்களுடைய பிள்ளைகளையும் சரி, நான் சேர்த்துக் கொள்ள முடியாது. பிறகு சொத்தில் பங்கு கேட்டு வருவார்கள்" என சொல்லிக்கொண்டு இருக்கிறான்.
நீண்ட நேரமாக காத்திருந்ததால் பொறுமை தாங்காமல் ஜனனி நேரடியாக கிருஷ்ணன் ரூமுக்குள் சென்று விடுகிறாள். "நீங்கள் செய்வது சரியில்லை இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் லீகல் ஆக்ஷன் எடுப்பேன்" என்று ஜனனி சொல்ல "உன்னால முடிஞ்சா எடுத்துக்கோ" என நக்கலாக சொல்கிறான் கிருஷ்ணன்.
வீட்டில் பிள்ளைகள் அனைவரும் ஆதிரைக்கு ஆதரவாக பேசுகிறார்கள். உங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்த வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம் இல்லையா. எதற்கு இப்படி அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்" என பேசிக்கொண்டு இருக்கையில் அதை ஜான்சி ராணி கேட்டு விடுகிறாள்.
விசாலாட்சி அம்மாவிடம் சென்று "பிள்ளைகளை போலவா பேசுதுங்க அந்த பிசாசுங்க. என்னத்த வளர்த்து வைச்சு இருக்காளுங்க உங்க வீட்டு மருமகளுங்க. நீங்க வந்து நியாயம் கேளுங்க" என விசாலாட்சி அம்மாவை மாடிக்கு அழைத்து செல்கிறாள் ஜான்சி ராணி.
கதிரும் வளவனும் அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் எப்படி போட்டுத்தள்ளலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜீவானந்தம் எங்கே இருக்கிறான் என தெரிந்து கொள்ள ஒரே வழி ஈஸ்வரிதான் என கதிரை ஏத்தி விடுகிறார் வளவன். கதிரும் கரிகாலனை வைத்து இந்த செயலை செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இன்றைய எபிசோடில் ஜனனியும் சக்தியும் விரக்தியுடன் வீட்டுக்கு திரும்புகிறார்கள். ஜான்சி ராணி ஒரு பஞ்சாயத்தை கூட்டி பெரிய பிரச்சினை செய்கிறாள். விசாலாட்சி அம்மா பேரப்பிள்ளைகளை திட்ட தாரா எதிர்த்து பேசுகிறாள். "அவங்க இந்த வீட்ல இருக்கிறதே எனக்கு பிடிக்கல" என்கிறாள் தாரா. அதற்கு விசாலாட்சி அம்மா "பிடிக்கலன்னா ஓடுங்கடி" என்கிறார். "இது எங்க வீடு வேணும்னா அவங்க ஓடட்டும்" என்கிறாள் தாரா. அவள் பேசுவதை பார்த்து வாயில் கையை வைத்து பொத்திக் கொள்கிறாள் ஜான்சி ராணி.
ஞானம் கதிரிடம் "என்ன நடந்தது சொல்லித் தொலை" என சொல்கிறான் அக்கம் பக்கம் சுத்தி பார்த்துவிட்டு கரிகாலனை வைத்து ஈஸ்வரியை வேவு பார்த்து ஜீவானந்தம் இருக்கு இடத்தை தெரிந்துகொள்ளும் பிளான் பற்றி சொல்கிறான் கதிர்.
ஜான்சி ராணி அநாகரீகமான கேவலமாக மருமகள்களை பேசுகிறாள். "புள்ள பெத்துக்குறப்ப புருஷனை நினச்சு பெத்து இருக்க மாட்டா" என அசிங்கமாக பேச அவளை "என்ன பேசிக்கிட்டு இருக்க?" என அடிக்க எகிறி கொண்டு போகிறான் தர்ஷன். அவனை ஆதிரை பிடித்து இழுத்து சமாதானம் செய்கிறாள். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.