மேலும் அறிய

Ethirneechal : பட்டுவுக்கு நாள் குறிக்கும் குணசேகரன்... வலையில் சிக்குவாரா அப்பத்தா? வெண்பாவின் நிலை என்ன? காத்திருக்கும் சஸ்பென்ஸ்

Ethirneechal Nov 4 : திருவிழாவுக்கு வரமுடியாது என சொன்ன அப்பத்தாவை கண்டிப்பாக வர வேண்டும் என வற்புறுத்தும் குணசேகரன். வெண்பாவை யாரிடம் விட்டு செல்வது என தெரியாமல் முழிக்கும் ஈஸ்வரி. 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனையும் கதிரையும் சாப்பிடுவதற்காக நந்தினி அழைக்க செல்ல அங்கே வளவன் இருப்பதை பார்த்துவிடுகிறாள். நந்தினி அங்கே எதற்கு வந்தாள் என்பது தெரியாமல் குணசேகரனும் கதிரும் ஷாக்காகிறார்கள். கதிர் சென்று அவளை விரட்டிவிடுகிறான். புதுசா வந்து இருப்பவரையும் அழைத்து வரச் சொல்கிறாள் நந்தினி.

Ethirneechal : பட்டுவுக்கு நாள் குறிக்கும் குணசேகரன்... வலையில் சிக்குவாரா அப்பத்தா? வெண்பாவின் நிலை என்ன? காத்திருக்கும் சஸ்பென்ஸ்

"அந்த ஜீவானந்தம் தரையில் சரிவதை பார்த்து என்னுடைய பொண்டாட்டி கதற வேண்டும்" என குணசேகரன் வளவனிடம் சொல்ல "நீ நினைக்குறது எல்லாம் நிச்சயம் நடக்கும்" என நம்பிக்கை கொடுக்கிறார் வளவன்.  

ஆண்கள் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட பெண்கள் அவர்களுக்கு உணவை பரிமாறுகிறார்கள். அப்போது அப்பத்தா அங்கே வந்து பெண்கள் அனைவரையும் உட்கார்ந்து சாப்பிட சொல்கிறார். அதை பார்த்து காண்டாகிறார் குணசேகரன். பெண்களும் அப்பத்தா சொல்வதை கேட்டாலும்  பயந்து பயந்து உட்கார ஈஸ்வரியையும் தர்ஷினியையும் சத்தம் போட்டு எழுப்பி "ஆம்பளைங்களுக்கு சமமா சாப்பிட முதல் பந்தியிலே உட்காருறீங்களா?" என சொல்ல அனைவரும் பயந்து எழுந்து விடுகிறார்கள்.

"அவங்க சமைக்கிற சாப்பாடு மட்டும் சாப்பிடுவீங்க ஆனா அவங்க உங்களோட உட்கார்ந்து சாப்பிட கூடாது இல்ல. இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். இனிமே அவங்க அடங்கி போக மாட்டாங்க. அப்ப நீங்க  அவங்களை மதிச்சு தான் ஆகணும்" என அப்பத்தா சொல்ல "அதையும் பார்க்கலாம் யார் அடங்குறான்னு" என குணசேகரன் சவால் விட "பார்க்க தானே போறீங்க" என்கிறார் அப்பத்தா. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal : பட்டுவுக்கு நாள் குறிக்கும் குணசேகரன்... வலையில் சிக்குவாரா அப்பத்தா? வெண்பாவின் நிலை என்ன? காத்திருக்கும் சஸ்பென்ஸ்

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

திருவிழாவிற்கு அனைவரும் கிளம்ப வெண்பாவை நினைத்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "இவளை இங்கே தனியாக விட்டுவிட்டு போக முடியாது. என்ன அக்கா பண்றது" என நந்தினி ஈஸ்வரியிடம் கேட்கிறாள். வெண்பாவை யாரிடம் விட்டுவிட்டு போக போகிறார்கள் என்பது பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார்கள்.

Ethirneechal : பட்டுவுக்கு நாள் குறிக்கும் குணசேகரன்... வலையில் சிக்குவாரா அப்பத்தா? வெண்பாவின் நிலை என்ன? காத்திருக்கும் சஸ்பென்ஸ்

குணசேகரன், கதிர், ஞானம் என அனைவரும் பேசிக்கொண்டு இருக்க ஜான்சி ராணியை விட்டு அப்பத்தாவை அழைத்து வர சொல்கிறார்கள். அப்பத்தா வந்ததும் திருவிழாவுக்கு வர சொல்லி சொல்கிறார்கள். "நான் வரல பா" என அப்பத்தா சொல்லவும் அதிர்ச்சியான கதிர் "எது ஏன் வரல" கதிர் கேட்க "நான் வரனுன்னு நீங்கயெல்லாம் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுறீங்க" என அப்பத்தா நக்கலாக கேட்க "நாளைக்கு ஒரே நாள் தானே சந்தோஷமா இருந்துக்க" என குணசேகரன் குத்தலாக சொல்கிறார்.

"நாளைக்கு மட்டும் இல்ல பா நாளைக்கு மற்றொரு நாள்" என அப்பத்தா சொல்ல "பட்டு நாளைக்கு ஒரே நாள்" என சிரித்து கொண்டே சொல்ல அப்பத்தாவுக்கு அவர்கள் மீது டவுட் வருகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget