Ethirneechal: தொடரும் ட்விஸ்ட்.. தர்ஷினியின் நிலை என்ன? - இன்றைய எதிர்நீச்சலில் சீரியல் அப்டேட் இதோ!
Ethirneechal : சக்தியை கார் ஒன்று இடித்து ஆக்சிடென்ட் செய்து விடுகிறது. பேச்சு மூச்சு இல்லாமல் கிடைக்கும் சக்தியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள். பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் தொடர்...
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் முந்தைய எபிசோடில் ஜனனிக்கு இன்ஸ்பெக்டர் போன் செய்து பள்ளி மாணவி ஒருவரின் சடலம் கிடைத்து இருப்பதாகவும் வந்து அது உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்குமா என அடையாளம் காட்ட சொல்கிறார். இந்த தகவலை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு பதட்டத்துடன் செல்கிறார்கள். அது தர்ஷினியாக இருக்காது என உள் மனதுக்கு தெரிந்தாலும் அவர்களால் பயத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
மறுபக்கம் கதிரையும் ஞானத்தையும், விசாலாட்சி அம்மா பயங்கரமாக திட்டி கொண்டு இருக்கிறார். பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுகிறார்கள் என சொல்லி அவருடைய புடவையை எடுத்து வந்து எரிந்து அதை கட்டி கொள்ள சொல்கிறார். தர்ஷினி எங்க இருந்தாலும் நாங்கள் தேடி கண்டுபிடித்து வருகிறோம் என சொல்லி கதிரும் ஞானமும் கிளம்ப அவர்களை தடுத்த குணசேகரன், யார் வீட்டு பிள்ளையை யார் தேடி கண்டுபிடிப்பது என சொல்லி ஆவேசமாக பேசுகிறார். அவர் அப்படி பேசுவதை பார்த்த கதிரும் ஞானமும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஜனனி பதட்டத்துடன் அந்த பெண்ணின் சடலத்தை பார்த்து அது தர்ஷினி இல்லை என சொல்லிவிட்டு ஓடிவிடுகிறாள். அனைவரும் அங்கிருந்து உடனடியாக கிளம்புகிறார்கள். அத்துடன் ஜனவரி 27ம் தேதிக்கான எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய ( ஜனவரி 29) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினியை கடத்தி சென்ற கார் நம்பரை வைத்து அந்த கார் உரிமையாளரின் அட்ரஸ் கிடைக்க அங்கே விரைந்து செல்கிறார்கள் ஈஸ்வரியும் மற்றவர்களும் . அங்கே சென்று பார்த்தால் ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்களிடம் சக்தி எகிறுகிறான். "எங்க வீட்டு பிள்ளையை கடத்திவிட்டு இப்போ குடும்பமா சேர்ந்து நடிக்குறீங்களா?" என சண்டையிடுகிறான். அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படுகிறது. அவர்கள் சொல்வதை கேட்டு சக்தியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மறுபக்கம் கதிரிடமும், ஞானத்திடம் "நாங்க இங்க இருக்கோம் அங்க இருக்கோம் என போன் போட்டு இவனுங்ககிட்ட சொல்லுறாளுங்க. அவளுங்க எங்க இருக்காளுங்கன்னு நான் சொல்லட்டுமா?" என குணசேகரன் சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சக்தி குடிக்க தண்ணீர் வாங்கிக்கொண்டு வரும் போது கார் ஒன்று வந்து வேகமாக சக்தி மீது இடித்துவிடுகிறது. பேச்சு மூச்சு இல்லாமல் அடிபட்டு கிடைக்கும் சக்தியை ஜனனியும் மற்றவர்களும் சேர்ந்து எழுப்புகிறார்கள். ஆம்புலன்சுக்கு யாரவது போன் செய்யுங்கள் என நந்தினி கத்துகிறாள். வேகவேகமாக சக்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
தர்ஷினியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கையில் சக்திக்கு விபத்து ஏற்பட்டது மேலும் பரபரப்பை எகிற வைத்துள்ளது. குணசேகரன் மிகவும் கூல்லாக இருப்பதை பார்த்தால் ஒருவேளை அவர் தான் ஆள் வைத்து தர்ஷினியை கடத்தி வைத்து இருப்பாரோ என சந்தேகம் வருகிறது. மறுபக்கம் இது ராமசாமி கிருஷ்ணாசாமியின் வேலையாக கூட இருக்கலாம் என தோன்றுகிறது. நாளுக்கு நாள் ஏராளமான ட்விஸ்ட்களுடன் கதிகலங்க வைக்கிறது எதிர்நீச்சல் ( Ethirneechal )தொடர்.