Ethirneechal : பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. குணசேகரன் திட்டம் நிறைவேறுமா?
Ethirneechal Dec 27 : குணசேகரனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (டிசம்பர் 26) எபிசோடில் வாசு வீட்டிற்கு வந்தது குணசேகரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எலெக்ஷனுக்காக அவர்கள் போட்டோஷூட் எடுப்பதை பார்த்து வாசு கிண்டல் செய்ய மேலும் கடுப்பாகிறார் குணசேகரன். சக்தி தான் போன் பண்ணி அவளை வர சொன்னதாகவும் அதற்கு ஐடியா கொடுத்தது கரிகாலன் என்றும் வத்தி வைக்கிறாள்.
ஈஸ்வரி எலெக்ஷனில் நிற்பதால் அவளுக்கு உறுதுணையாக இருப்பதற்காகத்தான், வாசு குணசேகரன் வீட்டுக்கு வந்துள்ளாள். அவர்கள் அந்த வேலையை துவங்குவதற்காக செல்ல அந்த சமயத்தில் ஜான்சி ராணி அவளுடைய ஆட்களை செட் செய்து மக்களுக்கு பணம் கொடுத்து ஒட்டு வாங்குவதற்காக பிளான் செய்து பணத்தை கணக்கு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதை வாசு வீடியோ எடுக்க குணசேகரன் டென்ஷனாகிறார். ஜெயிப்பதற்காக இப்படி செய்வது தப்பு என்று ஈஸ்வரி கண்டிக்க அவளை முடிந்தால் ஜெயித்து காட்டு என சவால் விடுகிறார்.
குணசேகரன், ”இந்த பொம்பளைகளை எல்லாம் அடக்க வேண்டும். அவர்களை கூட்டு சேர விட கூடாது” என திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி பூஜை செய்து பிரச்சாரத்திற்காக கிளம்புகிறாள். நந்தினியை போகவிடாமல் கதிர் தடுக்கிறான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் ஒரு பக்கம் தடபுடலாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்க மறுபக்கம் ஈஸ்வரி கிளம்பும் சமயத்தில் கதிரும் ஞானானும் அவர்களை போக விடாமல் சதி செய்கிறார்கள். நந்தினி இது எல்லாம் ட்ராமா என கண்டுபிடித்துவிட்டாலும் அவர்களை ஏதோ ஒரு காரணம் சொல்லி ரேணுகாவையும் நந்தினியையும் தடுத்து வைக்கிறார்கள்.
எதிர்த்து ஒருவர் பேச நாசுக்காக குணசேகரன் அவரை கண்டிக்கிறார். வீடு வீடாக ஈஸ்வரியும் ஜனனியும் சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். "உங்களுடைய ஆதரவு நிச்சயம் வேணும் பாட்டி" என அம்மாவிடம் சென்று ஜனனி சொல்ல, "இவங்களுக்கு ஒட்டு போட்டா என்ன கொடுப்பீங்க?" என அந்த பாட்டி கேட்க ஈஸ்வரி, ஜனனி மற்றும் சக்தி அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற குணசேகரனின் எண்ணத்தை ஈஸ்வரி உடைத்து எலெக்ஷனில் வெற்றிபெறுவாளா? குணசேகரன் ஈஸ்வரியிடன் தோற்று போய் நிற்கும் அந்த காட்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். மிகவும் பரபரப்பான கட்டத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர்.