மேலும் அறிய

Ethirneechal : தர்ஷினி கொடுத்த ஷாக்.. ஆடிப்போன குணசேகரன்.. பரபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்

Ethirneechal December 21 : லவ் மேட்டரை சொல்லி குணசேகரனை ஆடிப்போக வைத்த தர்ஷினிக்கு ஜனனி கொடுக்கும் அட்வைஸ். மனவேதனையில் கரிகாலன் என்ன செய்தான் தெரியுமா? எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு சென்றதால் ஜான்ஸியும் கரிகாலனும் கொளுத்தி கொள்கிறோம் என சொல்லி மண்ணெண்ணையை ஊற்றி கொள்கிறார்கள். கரிகாலன் இனி என்னால் வாழ முடியாது என மனசு வெறுத்து போய் பேசுகிறான்.

"ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு  சென்றதால் நிம்மதியாக வாழ்ந்து விடுவாளா? அவள் சித்திரவதையை அனுபவிக்க போகிறாள். நீதான் இந்த வீட்டு மாப்பிள்ளை. அதை மாற்ற முடியாது. தர்ஷினிக்கு நான் உன்னை கட்டி வைக்கிறேன்" என வாக்கு கொடுக்கிறார் குணசேகரன். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி தட்டி கேட்க அவளை அடக்கி விடுகிறார் குணசேகரன். இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை தர்ஷினி கேட்டு மனது வேதனை பட்டு அழுகிறாள்.

Ethirneechal : தர்ஷினி கொடுத்த ஷாக்.. ஆடிப்போன குணசேகரன்.. பரபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்

"அவர் நினைப்பது போல எதுவும் நடக்காது" என ஈஸ்வரியும், ஜனனியும் தர்ஷினியை சமாதானம் செய்கிறார்கள். ஆனால் தர்ஷினி "நாம பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அவர் தான் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறார். அவரை எதிர்த்து நம்மால் ஒன்னும் செய்ய முடியவில்லை" என ஆவேசமாக பேசுகிறாள். ஜனனி தர்ஷினியிடம்  பிராக்டிகலா பேசி சமாதானம் செய்கிறாள். ஈஸ்வரி நான் உன்னுடன் என்றுமே இருப்பேன் என சொல்லி ஆறுதல் சொல்கிறாள்.

ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டில் பேசியதை அனைத்தையும் நினைத்து பார்த்து ஆத்திரம் அடைகிறார் குணசேகரன். அந்த நேரத்தில் ஈஸ்வரி சென்று தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பது நியாயம் இல்லை என குணசேகரனிடம் பேசுகிறாள். "என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும். எஸ்.கே.ஆர் வீட்டுக்கு நான் போனதும் என்னோட மூக்கை உடைக்க வேண்டும் என ஆதிரையை ஏற்றிவிட்டு, போலீசையும் நீங்க தான் அனுப்பி வைத்தீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்" என்கிறார் குணசேகரன்.

விசாலாட்சி அம்மா ஆதிரையை சென்று பார்த்து வருகிறேன் என கிளம்புகிறார். அந்த நேரத்தில் தர்ஷினியை பார்க்க வேண்டுமென ஒரு பையன் வீட்டுக்கு வருகிறான். அவனை நிற்க வைத்து கேள்வி கேட்டு  கொண்டு இருக்கிறார் குணசேகரன். அப்போது தர்ஷினி அங்கு வந்து "அவனும் நானும் லவ் பண்றோம்" என இடியை தூக்கி போடுகிறாள். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 
  தர்ஷினி லவ் பண்றேன் என சொன்னதும் எரிச்சலான குணசேகரன் "முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள லவ் பண்றீங்களா?" என கத்த "முளைச்சு மூணு இலை விடாத பொண்ணுக்கு தான் நீங்க கல்யாணம் பண்ணி வைக்கணும் என பேசிகிட்டு இருக்கீங்க" என சரியான பதிலடி ஜனனி கொடுக்க குணசேரன் முகமே மாறிவிடுகிறது.
 
Ethirneechal : தர்ஷினி கொடுத்த ஷாக்.. ஆடிப்போன குணசேகரன்.. பரபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்

தர்ஷினியை அழைத்து வைத்து ரேணுகா, ஈஸ்வரி மற்றும் ஜனனி இந்த லவ் விஷயம் பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது தர்ஷினி மனம் வெறுத்து போய் பேச "நீ இந்த ஒரு குணசேகரனை பத்தி மட்டும் யோசிப்பதை விட்டுட்டு வெளிய போய் சந்திக்க போற ஆயிரம் குணசேகரனை எப்படி ஜெயிக்கணும் என யோசி" என தர்ஷினிக்கு ஊக்கமளிக்கிறாள் ஜனனி. அதை கேட்டு தர்ஷினி தன்னுடைய கண்களை துடைத்து கொண்டு சமாதானம் ஆகிறாள்.

தர்ஷினி லவ் விஷயத்தை பற்றி சொன்னதால் மிகுந்த அவமானம் அடைந்த கரிகாலன் முழுக்க குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்கிறான். "மனசு நெஞ்சு முடி எல்லாம் எரிஞ்சு போச்சுயா" என மிகுந்த மனவேதனையுடன் கத்திக்கொண்டு இருக்கிறான். ஜான்சி மகனின் இந்த நிலையை பார்த்து வேதனை அடைகிறாள். வீட்டில் உள்ள அனைவரும் கரிகாலன் வேதனைப்படுவதை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
 
உண்மையிலேயே தர்ஷினி காதலிக்கிறாளா அல்லது குணசேகரனிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்படி ஒரு பொய்யை சொன்னாளா? மீண்டும் ஆசையை காட்டி தன்னுடைய கௌரவத்திற்காக கரிகாலனை பலிகடாவாக மாற்றுகிறார் குணா. நாளுக்கு நாள் சூடேறி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
 
தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget