Ethirneechal : வளவனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான கதிர்... ஆட்டத்தை துவங்கிய குணசேகரன்... எதிர்நீச்சலில் நேற்று
Ethirneechal Oct 26 : வளவனையும் கரிகாலனையும் தனியாக வர சொல்லிவிட்டு நைசாக எஸ்கேப்பான கதிர். பிள்ளைகளிடம் இருந்து தனது ஆட்டத்தை துவங்கிய குணசேகரன் என்ன செய்தார் தெரியுமா? எதிர்நீச்சலில் நேற்று
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 26) எபிசோடில் குணசேகரன் தரிஷினி போட்ட காபியை குடித்துவிட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டுகிறார். "இயல்பாகவே பெண் குழந்தைகளுக்கு சமையல் கலை உள்ளுக்குளேயே இருக்கு. இந்த ஆம்பள பிள்ளைங்க போடுற சண்டை எல்லாம் விட்டுட்டு நல்லா படிச்சு முடி. நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன். வம்சத்தை விருத்தி செய்யுற வழிய பாரு. ஐசு, தாரா உங்களுக்கும் அதுதான்" என குழந்தைகளிடம் என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் பேசுகிறார் குணசேகரன்.
ஊருக்கு கிளம்பலாமா என ஞானம் கேட்க "இல்லப்பா இப்ப வேண்டாம். தூங்கி எந்திரிச்சுட்டு நாளைக்கு காலையில கிளப்பிடலாம். அசதியா இருக்கு" என்கிறார். "ஊருக்கு போறோம்னு நான் சமைக்கவே இல்லையே. சரி நான் போய் சாப்பிட ஏதாவது சமைக்குறேன்" என விசாலாட்சி அம்மா சொல்ல "நீ எதுக்குமா சமைக்கணும். இந்தா காபியையே தர்ஷினி எவ்வளவு நல்லா போட்டு இருந்தா. அவளே சமைச்சுடுவா" என சொல்லி ஐசு மற்றும் தாராவுக்கும் வேலையை சொல்லி அனுப்பிவிடுகிறார். மூன்று குழந்தைகளுக்கும் முகமே மாறிவிடுகிறது. தர்ஷனையும் திட்டி அனுப்பி விடுகிறார்.
"வீட்டுக்கு பெரியவங்க அப்பத்தா அவங்க வர சொன்னதால தான் வந்தோம்" என சம்பந்திகள் சொல்ல "ஏதோ பேச்சுக்கு சொன்னா உடனே வந்து நிப்பீங்களா. சரி வாங்க அப்பதான் அங்க என்ன நடக்க போகுதுனு உங்களுக்கு தெரியும்" என சொல்ல அவர்கள் கிளப்புகிறார்கள். அப்போது குணசேகரனை பார்க்க வக்கீலும் ஆடிட்டரும் வீட்டுக்கு வருகிறார்கள்.
கதிர் வளவனிடம் "நான் ஒரு அவசர வேலையா வெளியில போயிட்டு வரேன். நீங்க இந்த லூசு பயல கூட்டிட்டு கிளம்புங்க" என சொல்ல வளவன் டென்ஷனாகிறார். எவ்வளவு சொல்லியும் கதிர் கிளம்பிவிடுகிறான்.
காரில் சென்று கொண்டு இருக்கும் போது ஜான்சி வயிறு முட்ட சாப்பிட்டு வந்ததால் வயிறு கலக்கவே சக்தியை உடனே வண்டியை ஓரம் கட்ட சொல்லி கத்தி கொண்டே வருகிறாள். அதை வைத்து ஒரு அலப்பறையே செய்துவிடுகிறாள். வேறு வழியில்லாமல் சக்தியும் வண்டியை ஓரம் கட்ட புதர் பக்கமாக ஓடுகிறாள் ஜான்சி. அந்த நேரம் பார்த்து கரிகாலன் போன் செய்து மொக்கை போட அவனையும் திட்டி போனை வைத்து விடுகிறாள்.
காருக்கு திரும்ப வந்ததும் ஜான்சி ராணியை அனைவரும் அருவெறுப்பாக பார்க்கிறார்கள். குணசேகரனை நினைத்து பாட்டெல்லாம் படி கொண்டு வர ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் பேசியது எல்லாம் ஞாபகம் வருகிறது. "உங்கள் கணவரை நிச்சயமாக நான் முடித்துவிடுவேன்" என ஜீவானந்தம் சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.