Siragadikka Aasai Serial : பூக்கடையை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.. சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai Today Episode Written Update April 19:சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
"வெளியே கடை வச்சி இருக்கா இல்ல அதை மொதல்ல காலி பண்ணனும்" என்று விஜயா ரோகிணியிடம் சொல்கிறார். மேலும் பார்வதிக்கு போன் செய்து விஜயா புலம்புகிறார்." மாநகராட்சியில எப்டியும் முத்து பெர்மிஷன் வாங்கி இருக்க மாட்டாரு. கம்ளைண்ட் பண்ணா கடைய காலி பண்ணிடுவாங்க" என்று ரோகிணி சொல்கிறார். அதன்படி அவர்கள் கம்ளைண்ட் செய்ததால் மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை அகற்றுகின்றனர். அப்போது மீனாவும் அண்ணாமலையும் அதிகாரிகளிடம் பேசுகின்றனர். ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்கள் கடையை அகற்றுவதில் உறுதியாக உள்ளனர். மீனா அவர்களிடம் "கடையை எடுக்காதிங்க" என கெஞ்சுகிறார். ஆனால் அவர்கள் கேட்காமல் கடையை அகற்றி விடுகின்றனர்.
முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா அழுது கொண்டு நிற்கிறார். மீனா முத்துவிடம் நடந்ததை கூறுகிறார். "கம்ளைண்ட் யாரு கொடுத்தாங்க" என முத்து அண்ணாமலையிடம் கேட்கிறார். "அதெல்லாம் அவங்க எதுவும் சொல்லல" என அண்ணாமலை சொல்கிறார். "சும்மா ஒரு வண்டியில கடை போட்டா மட்டும் போதாது. அஃபிஷியலான நிறைய ப்ரோசுடர் எல்லாம் இருக்கு என ரோகிணி சொல்கிறார். ”ப்ராப்பரா பர்மிஷன் எதுவுமே வாங்காம கடைய வெச்சி இருக்கிங்க” என ரோகிணி கேட்கிறார். முத்து மீனாவின் கண்ணீரை துடைத்து விட்டு ”ஃபைன் கட்டி வாங்கிக்கலாம்” என சொல்கிறார்.
யாரோ கம்ளைண்ட் செய்ததால் தான் கடையை அகற்றியதாக விஜயா சொல்கிறார். ”உங்க பக்கமும் தப்பு இருக்கு தானே பெர்மிஷன் ஏன் வாங்கல” என ரோகிணி கேட்கிறார். “இதை யாரு பண்ணாங்கனு தெரியட்டும் அப்போ இருக்கு’ என முத்து சொல்கிறார். ”யாரோ ஒரு வீடு கொளுத்தி தான் இந்த வேலைய பார்த்து இருக்கணும்” என முத்து சொல்கிறார். ”ஏங்க எடுத்துட்டு போன நம்ம வண்டி திரும்ப கிடைக்காதா?” என மீனா அழுது கொண்டே கேட்கிறார்.
”இப்போ இப்டி அழுதுக்கிட்டு நின்னா என்ன ப்ரயோஜனம். யார் யாருக்கு என்ன வருமோ அதை தான் செய்யனும்” என விஜயா சொல்கிறார். ரோகிணியும் விஜயாவும் ரூமுக்குள் சென்று சிரிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.