மேலும் அறிய
Advertisement
ரோகிணி நேரம் நெருங்கிவிட்டது... மனோஜுக்கு வந்த பயத்தால் கடுப்பான விஜயா... சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today : மொட்டை கடுதாசியால் அலறி போன மனோஜ் விஜயா. ரோகிணி போட்டதும் புது பிளான் என்ன? இன்றைய சிறகடிக்க ஆசையில்.
Siragadikka Aasai Serial September 11 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (செப்டம்பர் 11) எபிசோடில் மனோஜுக்கு வந்த கடுதாசியை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறாள். அதற்கு மனோஜ் ஒரு கதையை சொல்லி அதில் திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள அனைவரையும் சாகடிக்கிறான் என பயமுறுத்துகிறான். அதை கேட்ட விஜயா மனோஜை திட்டி அடிக்கிறாள். மனோஜை தேடி ரோகிணி மாடிக்கு வர அந்த கடிதத்தை பார்த்து யாரோ மனோஜை பணத்துக்காக ஏமாற்றுவதற்காக இப்படி செய்கிறார்கள் என்கிறாள். விஜயா போலீசுக்கு போகலாம் என சொல்ல இது அந்த பிராட் பிஏ வேலையாக இருக்குமோ என பயந்து அதெல்லாம் வேண்டாம் என சமாளிக்கிறாள் ரோகிணி.
அடுத்த நாள் காலை மீனாவுக்கு அவளுடைய அம்மா போன் செய்து விசாரிக்கிறாள். "ஹாஸ்பிடலில் கர்ப்பமாக ஆவதற்கு முன்னர் எடுக்கும் டெஸ்ட் ஒன்றை ஆஃபரில் தருகிறார்கள். உங்க வீட்டில் தான் மூன்று மருமகள்கள் இருக்கீங்களே. வந்து டெஸ்ட் பண்ணிக்கோங்க" என சீதா சொல்ல "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. யார் யாருக்கு எப்போ குழந்தை பிறக்குதோ அப்போ பொறக்கட்டும். யாரும் எந்த டேஸ்டும் எடுத்துக்க வேண்டாம் " என்கிறாள் மீனா. சத்யா குரூப் ஸ்டடி பண்ண போயிருக்கான் என சொல்லி மீனா சந்தோஷப்பட அதை கேட்ட முத்து "அவன் குரூப் ஸ்டடி பண்ண போயிருக்கானோ இல்லை குரூப் குடி பண்ண போயிருக்கானோ" என முணுமுணுக்கிறான்.
ரோகிணியும் வித்யாவும் சேர்ந்து அம்மாவும் கிரிஷும் தங்குவதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பார்க்க போகிறாள். அங்கே ஹவுஸ் ஓனர் பல கேள்விகளை கேட்கிறார். பொய் மேல் பொய் சொல்லி அனைத்தையும் சமாளித்த ரோகிணி அட்வான்ஸ் பணத்தை இரண்டே நாளில் கொடுக்கிறேன் என சொல்லி டோக்கன் அட்வான்ஸ் மட்டும் கொடுக்கிறாள்.
மீனா சாப்பாடு கொடுப்பதற்காக அந்த தாத்தா பாட்டி இருக்கும் இடத்துக்கு போக அந்த தாத்தாவோ "வேணாம் மா எங்களுக்கு ஒருத்தர் வந்து மூணு செருப்பு தைக்க கொடுத்து இருக்கார். அதுல கொஞ்சம் பணம் கிடைச்சு இருக்கு. அதை வைச்சு நாங்க சமாளிச்சுக்குறோம்" என்கிறார். செருப்பை தைக்க கொடுத்தது முத்து தான் என்பதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறாள். இருவரும் மாறி மாறி தெரியாதவர்கள் போல பாராட்டி கொள்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இருவரையும் வாழ்த்துகிறார்கள்.
செல்வம் ஷெட்டில் குடித்துவிட்டு படுத்து கிடக்கிறான். அவனை எழுப்பிய முத்து என்ன நடந்தது என விசாரிக்க தன்னுடைய அப்பாவுக்கு 80வது பிறந்தநாள் வருகிறது. அதை கொண்டாட என்கிட்டே பணம் இல்லை என சொல்லி வருத்தப்படுகிறேன். உடனே முத்து "நீ ஏற்பாடு எல்லாம் பண்ணு. பணத்தை எப்படியாவது ரெடி பண்ணிக்கலாம்" என சொல்லி செல்வதை சமாதானப்படுத்துகிறான். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion