Siragadikka Aasai: மீனாவை அவமானப்படுத்தும் விஜயா.. அடுத்த பிளானோடு வீட்டுக்கு வந்த ஸ்ருதி அம்மா - சிறகடிக்க ஆசை இன்று!
Siragadikka Aasai serial Today June 25: 'சிறகடிக்க ஆசை' இன்றைய எபிசோடில் ரூம் கட்ட போட்ட பிளானால் வீட்டில் வெடிக்கும் பிரச்சினை. அதை சாதகமாக பயன்படுத்தி பெருசாக்க பிளான் செய்த ஸ்ருதியின் அம்மா.
சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனாவும் ஸ்ருதியும் சந்தோஷமாக கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே வந்த ரோகினி மீனாவை வீணாக வம்பு இழுக்கிறாள்.
"ரோகினி : என்ன மீனா பூ கட்டி நிறைய சம்பாதிக்குறீங்க போல. அங்கிள் கேட்டவுடனே வீட்டுக்கு பணம் கொடுக்குறேன் என சொல்லிடீங்க. ஒரு மாசம் உங்களுக்கு பணம் வரும் ஒரு மாசம் வராது. எந்த நம்பிக்கைல சொன்னீங்க. அங்கிள் கிட்ட நல்ல பெயரை வாங்கணும்னு தானே இப்படி செஞ்சீங்க?
மீனா : அப்படி ஒன்னும் நான் புதுசா மாமா கிட்ட நல்ல பெயரை வாங்கணும் என அவசியம் இல்ல. ஏற்கனவே எனக்கு நல்ல பெயர் தான் இருக்கு. எங்களால நிச்சயம் பணம் கொடுக்க முடியும். இப்போ தான் உங்க புருஷன் சம்பாதிக்கிறார். வீட்டுக்கு இதுவரைக்கும் எதுவுமே குடுத்தது கிடையாது. என்னோட புருஷன் பல வருஷமா இந்த வீட்டுக்கு பணம் கொடுத்துக்கிட்டு இருக்கார்."
"ரோகினி : என்ன சொல்லி காட்டுறீங்களா? மனோஜ் இன்னும் கொஞ்ச நாள்ல லட்சக்கணக்குல சம்பாதிப்பார்.
இப்படி மீனாவுக்கு ரோகினிக்கும் இடையில் சண்டை வலுக்கிறது. ஸ்ருதி அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து ரோகினியை வெளியே அழைத்து சென்றுவிடுகிறாள்."
அந்த நேரம் வந்த முத்து, மாடியில் மனோஜ் ஓவராக பேசுவது பற்றி சொல்ல மீனா ரோகினியும் அப்படி தான் பேசுறாங்க என சொல்கிறாள்.
அடுத்த நாள் பரசு இன்ஜினியர் உடன் அண்ணாமலை வீட்டுக்கு வந்து மாடியில் ரூம் கட்டுவதற்காக அளவு எல்லாம் எடுத்து ஐந்து லட்சம் ஆகும் என சொல்கிறார். பணத்தை ரெடி செய்ததும் நான் உங்களை கூப்பிடுகிறேன் என சொல்லி அனுப்பி வைக்கிறார் அண்ணாமலை.
"ரோகினி : ரூம் கட்ட 5 லட்சம் ஆகும் என சொல்றாங்களே அதுக்கு என்ன அங்கிள் பண்ணுவீங்க ?
அண்ணாமலை : அதுக்கு தான் நான் உங்கள் எல்லா கிட்டேயும் மாசம் எவ்வளவு கொடுக்க முடியும் என கேட்டேன்".
"ஸ்ருதி : மாச மாசம் கொடுக்கிற பணத்தை வைச்சு நீங்க 5 லட்சம் ரெடி பண்ணனும்னா அதுக்கு 2 வருஷம் ஆகும்.
அண்ணாமலை : அதுக்கு தான் லோன் எடுக்கலாம் என இருக்கேன். நீங்க மாசாமாசம் கொடுக்குற பணத்தை வைச்சு கட்டலாம் என நினச்சேன்."
"விஜயா : இப்போ உங்களை நம்பி யார் பணம் கொடுப்பா?
அண்ணாமலை : இந்த வீட்டு பத்திரத்தை வைச்சு மேல பணம் வாங்கலாம்.
விஜயா : இந்த வீட்டை மொத்தமா கடன்ல அழிச்சிடணுமா? இவங்களுக்கு தான் ரூம் கட்ட பிளான் பண்ணறீங்க. குடிசைய கட்டி குடுங்க அது போதும். இவ என்ன அரண்மனையில் இருந்தா வந்தா?"
மீனா : நான் என்னிக்கும் அரண்மனைக்கு ஆசைப்பட்டது கிடையாது. என்னோட புருஷனோட எங்க இருந்தாலும் எங்களுக்கு சந்தோஷம் தான்.
விஜயா மாறி மாறி மீனாவை அவமானப்படுத்தி பேச மீனா விஜயாவை எதிர்த்து பேசுகிறாள். விஜயாவும் நான் வீட்டு பத்திரத்தை கொடுக்க முடியாது. நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க என சொல்லிவிடுகிறாள்.
விஜயா : கடனை வாங்கி கஷ்டப்படாதீங்க
அண்ணாமலை : பிள்ளைங்களுக்கு இடையில பிரிவினையை ஏற்படுத்துற. இது நல்லாயில்ல. நீ பத்திரம் கொடுக்க வேண்டாம். நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கிறேன்.
ஸ்ருதி அவளுடைய அம்மாவிடம் ரூம் விஷயம் பற்றி சொல்கிறாள். அதை வாய்ப்பாக பயன்படுத்தி ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியின் அப்பாவிடம் 5 லட்சத்துக்கான செக் கொடுக்க சொல்லி சொல்கிறாள். அதை வைத்து அண்ணாமலை வீட்டில் பிரச்சினை செய்து ஸ்ருதியை வீட்டை விட்டு வெளியில் அழைத்து வர பிளான் போடுகிறாள்.
ஸ்ருதியின் அம்மா அண்ணாமலை வீட்டுக்கு போகிறாள். ரூம் பிரச்சினை பற்றி பேசி அப்படியே லோன் பற்றி பேச்சை ஆரம்பிக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.