மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Siragadikka Aasai Serial July 9: யார் அந்தக் களவாணி? பிளேட்டை திருப்பி போட்டு எஸ்கேப்பாகும் விஜயா... சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today: வீட்டில் உள்ள அனைவரிடமும் கவரிங் நகை பற்றின உண்மையை முத்து உடைத்துவிட, விஜயாவும் மானோஜூம் திருத்திருவென விழிக்கிறார்கள்.
Siragadikka Aasai Serial July 9: விஜய் டிவி யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாட்டி அனைவரின் பரிசையும் பாராட்டிப் பேசுகிறார்.
பாட்டி: எல்லாரோட பரிசும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. எனக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சு.
மனோஜ்: அப்ப அந்த ஸ்பெஷல் பரிசு யாருக்கு பாட்டி கொடுக்கக் போறீங்க?
பாட்டி: எல்லாரும் எனக்கு பரிசு வாங்கி கொடுத்தீங்க. ஆனா அது எல்லாத்தையும் விட உணர்வுப்பூர்வமா பரிசு கொடுத்தது முத்து. அதே போல ஒருத்தரோட வாழ்க்கையில நினைவுகள் ரொம்ப முக்கியம். நான் பல வருஷமா பாக்கணும் நினைச்ச என்னோட தோழிகள என்கிட்ட கூட்டிட்டு வந்தது முத்து தான். எனக்கு அடுத்த தலைமுறையும் என்னோட அனுபவத்தப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு மீனா எடுத்த வீடியோ உதவியாயிருக்கும்" என்கிறார் பாட்டி.
சாமி ரூமில் இருந்து எடுத்து வந்து அந்த பரிசுப்பொருளை அனைவருக்கும் காட்டுகிறார் பாட்டி. அது ஆறு தலைமுறையாக இருக்கும் பாரம்பரிய நகை. இந்த நகையை தகுதியான அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போட்டியை வைத்ததாக பாட்டி சொல்கிறார்.
அந்தப் பரிசை முத்துவுக்கும் மீனாவுக்கும் பரிசளிக்கிறார் பாட்டி. “தினமும் அதற்கு பூஜை செய்ய வேண்டும். விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை பத்திரமாக கொடுக்க வேண்டும்” என பாட்டி சொல்கிறார். முத்துவுக்கு மீனாவுக்கும் அந்தப் பரிசு கிடைத்ததில் விஜயா, ரோகிணி மற்றும் மனோஜ் முகமே மாறி விடுகிறது.
மீனா அந்த நகையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது முத்து பூஜை செய்துவிட்டு அந்த நகையை எடுத்து லாக்கரில் வைத்துவிடச் சொல்கிறான். மனோஜ் இருக்கும் வீட்டில் நகையை வெளியில் வைக்கவே பயமாக இருக்கிறது என்கிறான்.
அடுத்த நாள் முத்து பாட்டியை ஊருக்கு பஸ் ஏத்திவிட்டு வீட்டுக்கு வந்ததும் மீனாவின் நகை கவரிங் நகையாக மாறியது குறித்து அனைவரையும் அழைத்து வைத்துப் பேசுகிறான். முத்து சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
விஜயா எதுவும் தெரியாதது போல அமைதியாக இருக்கிறாள். அண்ணாமலை நகை மாறியது பற்றி விஜயாவிடம் கேட்க “என்னைக் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்? தங்க நகை தான் அவங்க என்கிட்ட குடுத்தாங்களான்னு தெரியலையே" என விஜயா சொன்னதும் மீனா விஜயாவைப் பார்த்து முறைக்கிறாள். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கல்வி
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion