மேலும் அறிய

Siragadikka Aasai serial July 11: உண்மையை உளறிய பார்வதி... எஸ்கேப்பான மனோஜ் - சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today : முத்துவும் மீனாவும் பார்வதி மூலம் நகை மாறியது பற்றி மறைமுகமாக விசாரிக்க உளற வந்த பார்வதியை விஜய் வந்து தடுத்து நிறுத்திவிடுகிறாள். முத்துவுக்கும் மீனாவுக்கும் வந்த சந்தேகம்.

Siragadikka Aasai Serial July 11 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மனோஜுக்கு போன் செய்து கவரிங் நகை வாங்கியது பற்றிய பீட்பேக் கேட்க முதலில் தயங்கிய மனோஜ் பிறகு சுதாரித்து கொண்டு அவளை திட்டி போனை வைத்து விடுகிறான். 

"முத்து : நீ நகை கடையில் இருந்து பேசுறேன் என சொன்னதும் அவன் என்ன சொன்னான்?

ஸ்ருதி : முதல அவர் சைலன்ட்டா இருந்தார். அப்புறமா நான் எதுவும் வாங்கல எனக்கு எதுக்கு போன் பண்ணறீங்க. இன்னொரு தடவை பண்ண சைபர் க்ரைமில் கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன் என சொல்லிட்டார்.

முத்து : அவன் பயந்துட்டான். அவனே உளறி மாட்டிப்பான்" என்கிறான். 

ரோகிணிக்கு க்ரிஷ் போன் செய்து பிறந்தநாளுக்கு வர சொல்லி சொல்கிறான். அவளும் எதையோ சொல்லி சமாளித்து அடிக்கடி எனக்கு  போன் செய்து பேச வேண்டும் என அம்மாவிடம் சொல்கிறார். 

வீட்டுக்கு சென்ற மனோஜ் விஜயாவிடம் போன் வந்தது பற்றியும் நகை பற்றி விசாரித்தது பற்றியும் சொல்ல விஜயா ஷாக்காகிறாள். 

"விஜயா : இது முத்துவோட வேலையா தான் இருக்கும். அவன் உண்மையை கண்டுபிடிக்குற வரைக்கும் விடமாட்டான். வேற யாரையோ வைத்து போன் பேசி இருக்கான். முதல தங்க நகையை வாங்கி வைச்சா தான் நாம இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். 

மனோஜ் : எனக்கு ரோகிணியை சமாளிப்பது தான் பெரிய விஷயமா இருக்கு. கடையில பெரிய வியாபாரமும் நடக்கல" என்கிறான். 

Siragadikka Aasai serial July 11: உண்மையை உளறிய பார்வதி... எஸ்கேப்பான மனோஜ் - சிறகடிக்க ஆசையில் இன்று

முத்து மீனாவுக்கு போன் செய்து பார்வதி வீட்டுக்கு வர சொல்கிறான். அம்மா என்ன பண்ணாலும் அது பார்வதி அத்தைக்கு தெரியாமல் இருக்காது. அவங்க கிட்ட நாசூக்கா விசாரித்து பார்க்கலாம் என வர சொல்கிறான். 

பார்வதி மீனாவையும் முத்துவையும் பார்த்து சந்தோஷப்படுகிறாள். முத்து பாட்டியின் பிறந்தநாளுக்கு வந்தது பற்றி பேசி மெல்ல மெல்ல போட்டு வாங்குகிறான். பார்வதி உளற ஆரம்பித்து பின்னர் அப்படியே நிறுத்திக்கொள்கிறார். 

"முத்து : நகை யார் எடுத்தானு தெரிஞ்சாவது திரும்ப கிடைக்குமா இல்லையான்னு தெரியும். கிடைச்சா பாட்டிக்கு நான் ஆசைப்பட்ட செயின் வாங்கி தருவேன். 

பார்வதி : அது வந்து மனோஜும் விஜயாவும்" என இழுக்க அதற்குள் விஜயா வந்து தடுத்து விடுகிறாள். 

முத்துவும் மீனாவும் அங்க இருந்து சமளித்துவிட்டு கிளம்புகிறார்கள். 

Siragadikka Aasai serial July 11: உண்மையை உளறிய பார்வதி... எஸ்கேப்பான மனோஜ் - சிறகடிக்க ஆசையில் இன்று

"பார்வதி : நல்ல வேலை நீ வந்து என்னை காப்பாத்துன விஜயா. நகையை பத்தி தான் கேட்டாங்க.

விஜயா : அப்போ அவங்க கிட்ட உளறிட்டியா? ஏதோ பிளான் பண்ணி தான் வந்து இருக்குங்க. இனி ஜாக்கிரதையா இருக்கணும்" என பதட்டப்படுகிறாள் விஜயா. 

செல்வம் முத்துவுக்கு போன் செய்து அங்கே ஒரு இடத்தில் குறைந்த விலையில் பொருட்களை கொடுக்கிறார்களாம் அதனால் தனக்கு பிரிட்ஜ் வாங்க உதவி செய்யுமாறு அழைக்கிறான். ஆனால் டென்ஷனாக இருக்கும் முத்து வர முடியாது என சொல்ல மீனா முத்துவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget