“பொண்ணுங்கள பாத்தா பயமா இருக்கு; ஒருத்தர் மனைவியிடம் படாதபாடு படறாரு” - மனம் திறந்த விஷ்ணு விஜய்!
சத்யா தொடரின் நடிகை ஆயிஷாவை விஷ்ணு காதலித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், விஷ்ணு இவ்வாறு கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், ஆஃபிஸ் தொடர்களின் மூலம் கவனமீர்த்தவர்.
தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா தொடர் மூலம் விஷ்ணு பெரும் பிரபலமடைந்தார். தற்போது சத்யா தொடரின் இரண்டாம் பாகம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
View this post on Instagram
தவிர நடிகை ரக்ஷிதாவுடன் கலர்ஸ் தமிழில் "இது சொல்ல மறந்த கதை" என்ற தொடரிலும் விஷ்ணு விஜய் நடித்து வருகிறார்.
இவர் முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காதல், திருமணம் குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
“பெண்களைப் பார்த்தாலே பயமாய் இருக்கு. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண் நடிகர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்போது புரிதல் இருக்க வேண்டும். அவ்வாறு புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும்.
View this post on Instagram
என் சக நடிகர் ராஜ்குமார் திருமணம் செய்து கொண்டு படும்பாட்டை நான் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் மனைவி வீடியோ காலில் வந்து பேசும்போது அவரது முகபாவனையைப் பார்த்தால் எங்கள் எல்லோருக்கும் சிரிப்பே வந்து விடும். அவர் மனைவி அவரை கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
சத்யா தொடரின் நடிகை ஆயிஷாவை விஷ்ணு காதலித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், விஷ்ணு இவ்வாறு கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.