Seetha Raman Aug 11: மாப்பிள்ளையாக வந்து இறங்கிய சத்யன்.. கோபத்தில் மகா, மதுமிதா கொடுக்க போகும் ஷாக் - சீதா ராமன் இன்றைய எபிசோட்!
“இதுக்காக தான் இந்த ஏற்பாடா” என்று ஆவேசப்பட சீதா சிரித்து வெறுப்பேற்ற துப்பாக்கியுடன் கோபமாக வெளியே வருகிறாள் மகா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். நேற்றைய எபிசோடில் சுபாஷூம் சேதுவும் சீதாவை வெளியே போக சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஒரு பக்கம் சீதா ராமை ஏற்றி விட, அவன் “நான் போய் அப்பா கிட்ட கேட்கிறேன்” என கோபமாக வர, இன்னொரு பக்கம் ராமின் தங்கைகள் ராம் கோபப்பட்டு அடிக்க வந்த விஷயத்தை சொல்ல சுபாஷ் சேது ஆகியோர் துப்பாக்கியுடன் ராமை நோக்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் எதிர் எதிராக நிற்க ,இந்த நேரம் பார்த்து செக்யூரிட்டி ஓடி வந்து சத்யன் மாப்பிளை மாதிரி மேளதாளத்துடன் வந்திருப்பதை சொல்ல, “இதுக்காக தான் இந்த ஏற்பாடா” என்று ஆவேசப்பட சீதா சிரித்து வெறுப்பேற்ற துப்பாக்கியுடன் கோபமாக வெளியே வருகிறாள் மகா.
வீட்டுக்குள் நுழைய வரும் சத்யனை தடுத்து நிறுத்தி "இன்னொரு அடி எடுத்து வைத்தால் பிணமாக நான் இங்க இருந்து போகணும்” என்று சொல்ல, சுபாஷ், சேது ஆகியோர் “போட்டு தள்ளிடு மகா” என்று ஏற்றி விடுகின்றனர். ராம் பதற்றத்தில் இருக்க, சீதா “இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும், என்கிட்ட வேறொரு பிளான் இருக்கு” என்று மதுமிதா சொப்னாவை அழைத்து வரும் விஷயத்தை சொல்கிறாள்.
ஆட்டோ வழியில் பிரேக் டவுன் ஆகி நிற்க, இவர்கள் வர நேரம் ஆகும் என்பதால் சீதா அதற்குள் இங்க ஏதாவது பண்ண வேண்டும் என்று பிளான் போட, மீரா “சத்யனை கொள்வதாக இருந்தா முதலில் என்னைக் கொல்லுங்க” என்று துப்பாக்கி முன் வந்து நிற்கிறாள். “அதுக்கு முன்னாடி என்னைக் கொல்லுங்க” என்று சீதாவும் வந்து நின்று நேரத்தை இழுக்கின்றனர்.
இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.