Sandhya Raagam: ரகுராம் வீட்டுக்கு வரும் கார்த்திக்: ஷாருக்கு ஷாக் கொடுத்த சீனு - சந்தியா ராகம் அப்டேட்!
அசைந்து தூங்கிக் கொண்டிருக்கும் மாயா திடீரென சீனு சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது போல கனவு கண்டு எழுகிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சடங்கு முடிந்து மாயா, தனம் மற்றும் ஷாருவை குடிசையில் உட்கார வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது அசைந்து தூங்கிக் கொண்டிருக்கும் மாயா திடீரென சீனு சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது போல கனவு கண்டு எழுகிறாள். “நாளைக்கு சீனு முகத்தில் முழிக்கக் கூடாது” என முடிவெடுக்கும் மாயா மீண்டும் படுத்து தூங்குகிறாள்.
அடுத்து தனம் தூக்கம் வராமல் கார்த்திக் சொன்ன விஷயங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, மறுப்பக்கம் கார்த்திக்கும் “தனத்தை ரொம்ப திட்டிட்டேன், அவளை சமாதானம் செய்து போட்டியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும்” என யோசிக்கிறான். உடனே ரகுராம் வீட்டு லேண்ட் லைனுக்கு போன் போட, ரமணி பாட்டியும் மணிகண்டன் மாறி மாறி போனை எடுக்க பேச முடியாமல் போனை கட் பண்ணி விடுகிறான்.
சரி நேராக வீட்டுக்கு போய் தனத்தை சந்தித்து பேசி சமாதானம் செய்து டோர்ணமெட்டில் பங்கேற்க வைக்கலாம் என முடிவெடுத்து வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.
அடுத்ததாக பார்வதி சீனுவிடம் வந்து “மாயா குளிர் தாங்க மாட்ட, அவளுக்கு பெட்ஷீட் எடுத்துட்டு போய் கொடுத்துட்டுமா?” என்று சொல்ல, முதலில் தயங்கும் சீனு மாயாவை பார்க்க, நல்ல சந்தர்ப்பம் என ஓகே சொல்லி பெட் சீட்டை எடுக்க உள்ள செல்கிறான். அதற்குள் பார்வதி சாருவிடம் வந்து “நீ மாப்ள முகத்தில் முடிப்பதற்கு ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என சொல்லி மாயாவையும் ஷாருவையும் குடிசை மாற்றி உட்கார வைக்கிறாள்.
பெட்ஷீட்டை எடுத்து வரும் சீனு மாயா இருந்தா குடிசைகள் நுழைந்து சாருவை பார்ப்பான் என பார்வதி எதிர்பார்க்க, அவன் தவறுதலாக சாரு இருந்த குடிசைக்குள் நுழைகிறான். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.