‘எங்கிருந்தாலும் வாழ்க!’... பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய ரித்திகா... ‘கோபி’ சதீஷ் சோக பதிவு!
பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரித்திகா விலகல் குறித்து மறைமுகமாக போஸ்ட் போட்ட நடிகர் சதீஷ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்வாரஸ்யமான தொடர் பாக்கியலட்சுமி. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் கலக்கி வருகிறது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற கோணத்தில் நகர்ந்து வரும் இந்த கதைக்களம் குடும்பத் தலைவிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி, பாக்கியா, ராதிகா உள்ளிட்டோருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில காரணங்களால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் தெரிவித்து இருந்தார். இது பாக்கியலட்சுமி சீரியலின் தீவிர ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவரே நான் விலகப்போவதில்லை, கோபியாக தொடர்வேன் என தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வீடியோ வெளியிட்டார்.
அமிர்தா விலகல் :
சதீஷை தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. மிகவும் க்யூட்டான மருமகளாக சிறப்பாக நடித்து வந்தார் ரித்திகா. இவர் ஏற்கனவே குக் வித் கோமாளி, ராஜா ராணி சீசன் 1 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
காரணம் என்ன?
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு கூட தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த ரித்திகா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுவது சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ரித்திகா கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து இருந்தார். இந்த சமயத்தில் அவரின் விலகல் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ரித்திகா விலகளுக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இனி அமிர்தவாக?
பாக்கியலட்சுமி தொடரில் ரித்திகா நடித்த அமிர்தா கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் அபி என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் அக்ஷிதா அசோக் நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுவரையில் ரித்திகாவின் விலகல் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நடிகர் சதிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டுள்ள ஒரு போஸ்ட் ரித்திகாவின் விலகலை உறுதிப்படுத்துகிறது.
ரித்திகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "எங்கிருந்தாலும் வாழ்க!" என்ற கேப்ஷனுடன் இருக்கும் சதீஷின் இந்த போஸ்ட் ரித்திகாவின் விலகலை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
சதீஷின் இந்த போஸ்டுக்கு "உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி சார்" என ரிப்ளை செய்துள்ளார் நடிகை ரித்திகா.