Reehana: பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாலினி மாதிரி பண்ணுங்க! அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு ரிஹானா காட்டிய உதாரணம்!
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு பாண்டியன் ஸ்டோரிஸ் 2 சீரியலில் நடித்த நடிகை ரிஹானா தீர்வு ஒன்றை சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சக்திவேலுவிற்கு மனைவியாக மாரி என்ற ரோலில் முதலில் நடித்தவர் தான் ரிஹானா. இப்போது அவருக்கு பதிலாக சாய் மாதவி நடித்து வருகிறார். மேலும் பொன்னி சீரியலில் ஹீரோயின் அம்மா ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாகவே சர்ச்சையான விஷயங்களை பேசி... பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிஹானா தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்துள்ளார். அதில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிருக்கு மனைவியாக ராஜீயாக நடிகை ஷாலினி நடித்து வருகிறார். அவரைப் போன்று நடந்து கொள்ள வேண்டும் என்று ரிஹானா கூறியிருக்கிறார்.
எல்லா துறையிலும் பெண்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது. பெண்களைப் போன்று ஆண்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. அதிலேயும் சினிமா என்றாலே கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து எல்லோருமே பேசி வருகிறார்கள்.
அதே போன்றுதான் இப்போது நடிகை ரிஹானா சின்னத்திரையில் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில், நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். அப்படியிருக்கும் போது அதிலிருந்து தப்பிக்க நடிகைகள் உறவினர்களை கையோடு கூட்டிக் கொண்டு வர வேண்டும். யாரையும் நாம் நம் அருகில் நெருங்கவே விடக் கூடாது. அப்படி நம்மை சுற்றிலும் நம் உறவினர்கள் யாரேனும் ஒருவர் இருக்க வேண்டும்.
இப்போது திருமணமான நடிகையாக இருந்தால் அவரது கணவரோ அல்லது மாமியாரோ கூடவே இருக்க வேண்டும். அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ராஜீக்கு அவர் கூடவே அவரது மாமியார் இருக்கிறார். அவரை விட்டு ஒரு போதும் பிரிந்து செல்லவே மாட்டார். அவர் நடிக்க வந்த போது அவருக்கு எப்படி மேக்கப் போட வேண்டும் என்று கூட தெரியாது. சீரியல் சூட்டிங்கிற்கு அவருடைய மாமியார் உடன் தான் வருவார். அவரை அம்மா என்று தான் அழைப்பார். ஷாலினிக்கு தேவைப்படும் எல்லாவற்றையும் அவர் செய்து கொடுப்பார்.
அப்படித்தான் மேக்கப் பொருட்களை என்னை வாங்கி வர சொன்னார். நானும் வாங்கி வந்து கொடுத்தேன். அப்படி அவருடன் இணைந்து அவருக்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு அம்மாவாக அவர் தான் செய்து கொடுப்பார். இப்படி நம்மை சுற்றி யாரேனும் ஒருவர் இருந்தால் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒன்றைய பற்றி யாரும் நம்மிடம் கேட்க மாட்டர்கள் என்று கூறி இருக்கிறார்.

