குமரவேல் கனவில் மண்ணை போட்ட அரசி! எதிர்ப்பாராத ட்விஸ்ட் - பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடித்த பூகம்பம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலுவுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 491ஆவது எபிசோடில் அரசியை காணோம் என்று குமாரவேலுவிடம் கதிர், சரவணன், செந்தில் ஆகியோர் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது... அரசி எங்கேயும் போகவில்லை, தன்னை தேடி வந்துவிட்டால். தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியதாக குமரவேல் கூறுகிறான்.
ஆனால், அவர் சொல்வதை யாரும் நம்பவில்லை. அரசி சொன்னால் தான் நம்புவோம் என்று கூறவே, அரசி காரிலிருந்து இறங்கியதுமே தனக்கு திருமணமாகிவிட்டதாக கூறி தாலியை காட்டுகிறார். ஆனால், உண்மையில் குமாரவேல் அரசிக்கு தாலி கட்டவில்லை. மாறாக, அரசி காரிலிருந்த தாலியை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தை மானம், மரியாதை, கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துணிச்சலாக தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டார். இது குமாரவேலுவிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சக்திவேல் மற்றும் முத்துவேலுவிற்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மீள துயரத்தில் இருக்கும் போது அரசி மட்டும் தைரியமாகவும், துணிச்சலாகவும் இருந்தார். பாண்டியனின் குடும்பத்தை பழி தீர்க்க ஆசைப்பட்ட குமாரவேலுவிற்கு இது ரொம்பவே ஷாக் தான். இருந்தாலும் பாண்டியன் தனது மகளுக்கு நிச்சயம் செய்த தனது அக்கா மற்றும் மாமாவின் வீட்டாருக்கு தான் இந்த சம்பவம் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களும் பாண்டியனை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு கேவலப்படுத்திவிட்டனர். பாண்டியனின் குடும்பத்தை சும்மா விட மாட்டோம் என்றும், சாபமும் விட்டுள்ளனர். இறுதியாக அரசி தான் தனது அப்பாவிடம் வந்து பேசுவதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த ஒற்றை சம்பவத்தின் மூலம் தன்னை அசிங்கப்படுத்த நினைத்த குமரவேல் வாழ்க்கையையே ஒட்டு மொத்தமாக முடிச்சி கட்டு ஆப்பு வைத்துள்ளார் அரசி. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கும், போலீஸ் தலையீடு இருக்குமா அல்லது முத்துவேலுவின் குடும்பத்தினர் அரசியை ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















