அவமானப்படுத்தப்பட்ட மீனாட்சி.. சக்தி எடுக்கப்போகும் முடிவு என்ன? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!
பூஜாவும் வெற்றியும் ஜீப்பில் ஒன்றாக வருகிறார்கள். அந்நேரம் வெற்றியின் செல்போனில் சக்தியின் போட்டோவை பார்த்து பூஜா கோவம் அடைகிறார்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் வெற்றி மீதான எண்ணத்தை மீனாட்சி மாற்றிக் கொள்ளும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
நேற்றைய எபிசோடில் மீனாட்சியும் துர்காவும் பஸ்க்கு காத்திருக்க, துர்கா லிப்ட் கேட்கிறார். அப்போது ஒரு கார் நிற்கிறது. அது வெற்றியின் வண்டி என்று தெரிந்து மீனாட்சி கோபமாகிறாள். தன்மேல் எந்த தப்பும் இல்லை என்று மீனாட்சிக்கு வெற்றி புரிய வைக்க, காரில் மீனாட்சி துர்காவை கூட்டிக்கொண்டு செல்ல மீனாட்சிக்கு மயக்கம் வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
View this post on Instagram
இந்நிலையில் இன்றைய எபிசோடில் மயக்கமாய் இருக்கும் மீனாட்சிக்கு வெற்றி டீ வாங்கி கொடுக்கிறார். அப்போது வெற்றி மீது எந்த தவறும் இல்லை என்று துர்கா மீனாட்சிக்கு புரிய வைக்கிறாள். இதனையடுத்து துர்காவையும், மீனாட்சியையும் வெற்றி அவர்கள் வீட்டில் டிராப் செய்கிறான். இதை பார்த்து சக்தி குழப்பமடைகிறார்.
மேலும் நடந்ததை மறந்துவிட்டேன், நீயும் மறந்துவிடு என்று மீனாட்சி வெற்றியை ஆசீர்வாதம் செய்து அனுப்புகிறாள். பின்னர் சக்தி வாழ்க்கைக்கு ஒரு நல்ல முடிவை காட்டச்சொல்லி சாமியிடம் அவர் வேண்டிக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து பூஜாவும் வெற்றியும் ஜீப்பில் ஒன்றாக வருகிறார்கள். அந்நேரம் வெற்றியின் செல்போனில் சக்தியின் போட்டோவை பார்த்து பூஜா கோபம் அடைகிறார். அப்போது சாப்பிட வெளியே போகலாம் என்று பூஜா கேட்க ,வெற்றி மீனாட்சி மெஸ்ஸிற்கு அழைத்து வருகிறார்.
அவர்களை மீனாட்சி சந்தோஷமாய் வரவேற்கும் நிலையில் பூஜாவையும், வெற்றியையும் பார்த்து யமுனாவும், துர்காவும் கோவப்பபடுகிறார்கள். ஆனால் மீனாட்சி அவர்களை சமாதானப்படுத்தி பரிமாற சொல்ல சாப்பாடு சரி இல்லை என்று பூஜா மீனாட்சியை இன்சல்ட் செய்யும் காட்சிகள் இடம் பெறுகிறது.