Meenakshi Ponnunga: சக்தியை தாரை வார்த்து கொடுக்கப்போன மீனாட்சி, கடைசி நிமிடத்தில் காத்திருந்த ட்விஸ்ட்..
தன்னிடம் இந்த தாரைவார்க்கும் நிகழ்ச்சி நடைபெறாது என்று சாமி சொன்னது போல் நடந்தது என்று மீனாட்சி தன் மகள்களிடம் சொல்கிறார்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனா கார்த்திக் திருமணம் நடக்க சக்திக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
நேற்றைய எபிசோடில் மீனாட்சி வீட்டிற்கு வரும் புஷ்பா குடும்பத்தினர் சக்தி சங்கிலிக்கு மாலை மாற்ற சொல்லி தாரை வார்த்து கொடுக்கும் சடங்கை ஆரம்பிக்கின்றனர். ஆனால் மீனாட்சி தயக்கத்துடன் இது நடக்க கூடாது என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டே சக்தியின் கையைப் பிடித்து சங்கிலியன் கையில் ஒப்படைக்க போகும் பொழுது அங்கு போலீஸ் வந்து சங்கிலியை கைது செய்து இழுத்துச் செல்கின்றனர்.
View this post on Instagram
இதனால் அதிர்ச்சி அடையும் புஷ்பா, நீதிமணி போலீசாரிடம் அவரை விடுமாறு வேண்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து கோகிலா யமுனாவிடம் உன் கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை என்று சண்டை போடுகிறாள். அப்பொழுது அங்கு வரும் புஷ்பா திட்டமிட்டு சக்தி செய்த காரியத்தால் தான் சங்கிலியை போலீஸ் கைது செய்தது என்று வாக்குவாதம் செய்ய தொடங்கும் காட்சிகள் இடம் பெற்றது.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கார்த்திக்கின் அம்மா, யமுனா கார்த்திக் திருமணம் நடக்க சக்திக்கு கடைசி வாய்ப்பு கொடுத்து கிளம்புகிறார். அடுத்து சங்கிலி கைதுக்கு சக்தி காரணம் என்று புஷ்பா சொல்ல, மீனாட்சி சக்திக்கு ஆதரவாக பேசி புஷ்பாவை திட்டி அனுப்புகிறாள். உன்னை போலீஸ் ஏன் பிடித்தது என்று புஷ்பா சங்கிலியிடம் கேட்கிறாள். எல்லாம் சக்தி பின்னால் இருக்கும் வெற்றி தான் காரணம் என்று அவர் புஷ்பாவிடம் சொல்லுகிறார்.
இதற்கிடையில் மீனாட்சி வீடும் மெஸ்ஸும் என் கைக்கு வரவேண்டும் என்பதற்காக தான் உனக்கும் சக்திக்கும் திருமணம் என்று கூறும் புஷ்பா சங்கிலியை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜாமீனில் வெளியே வருகிறார். இதனை சக்தி சொல்ல, யமுனா, துர்கா மற்றும் மீனாட்சி ஷாக்காகின்றனர்,
மேலும் என்னிடம் இந்த தாரைவார்க்கும் நிகழ்ச்சி நடைபெறாது என்று சாமி சொன்னது போல் நடந்தது என்று மீனாட்சி தன் மகள்களிடம் சொல்கிறார். உடனே யமுனாவும் துர்காவும் சங்கிலியை திருமணம் செய்ய வேண்டாம் என்று சக்திக்கு அட்வைஸ் செய்யவும், அவரோ கோபமாக யமுனாவை ரூமுக்கு அழைத்து செல்கிறாள். மேலும் அடுத்ததாக மீனாட்சியும் துர்காவும் பஸ்க்கு காத்திருக்க, துர்கா லிப்ட் கேட்கிறார். அப்போது ஒரு கார் நிற்கிறது. அது வெற்றியின் வண்டி என்று தெரிந்து மீனாட்சி கோவமாகிறாள். தன்மேல் எந்த தப்பும் இல்லை என்று மீனாட்சிக்கு வெற்றி புரிய வைக்க காரில் மீனாட்சி துர்காவை கூட்டிக்கொண்டு செல்ல மீனாட்சிக்கு மயக்கம் வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.