Meenakshi Ponnunga: பாதியில் நின்ற லிப்ட்; மயங்கி விழுந்த சக்தி.. - பரபரக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்!
சங்கிலி, சக்தி மற்றும் வெற்றி, பூஜா என நால்வரும் ஒரே ஜவுளி கடைக்கு வருகிறார்கள். சக்தி எடுக்கும் புடவையையே பூஜா வேண்டும் என சொல்ல, கடைக்காரர் அது வேறொருவர் எடுத்து விட்டதாக சொல்கிறார்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலி, சக்தி மற்றும் வெற்றி, பூஜா என நால்வரும் ஒரே ஜவுளி கடைக்கு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்னவென்று பார்க்கலாம்.
முன்னதாக வெற்றியை கோவிலில் மாலையும் கழுத்துமாக வீட்டில் நிச்சயித்த பெண்ணான பூஜாவுடன் பார்க்கும் சக்தி அதிர்ச்சியடைகிறார். அவரிடம் நெஞ்சில் அம்மா என பச்சை குத்தியிருக்கும் நபர், வெற்றி தான் என தான் கண்டறிந்த விஷயத்தை துர்கா சொல்கிறார். மேலும் கார்த்தியின் கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்தியதும் வெற்றி தான் என்பது சக்திக்கு தெரிய வருகிறது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து சங்கிலி வீட்டுக்கு வந்து சக்தியை அழைத்து கொண்டு, ஜவுளி கடைக்கு போக வேண்டும் என சொல்கிறார். மீனாட்சியும் சக்தியை அனுப்பி வைக்க, என்னம்மா நீயே அனுப்பி வைக்கிற என யமுனா கேட்கிறார்.
அதற்கு துணி எடுக்க தானே போறாங்க, போகட்டும் இந்த கல்யாணம் நடக்காது என சாமியே சொல்லிடுச்சு என மீனாட்சி தெரிவிக்கிறார். அதேசமயம் சரண்யா தனது அம்மா ரங்கநாயகியிடம் வெற்றிக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைக்கறீங்க என சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்து ரங்கநாயகி வெற்றியிடம் இது பற்றி கேட்கிறார்.
அவர் ரங்கநாயகியை கட்டியணைத்து அழுகிறான். ஆனால் சரண்யாவிடம் இது பற்றி பேச வேண்டாம் என கண் ஜாடை காட்டுகிறார்.சங்கிலி, சக்தி மற்றும் வெற்றி, பூஜா என நால்வரும் ஒரே ஜவுளி கடைக்கு வருகிறார்கள். சக்தி எடுக்கும் புடவையையே பூஜா வேண்டும் என சொல்ல கடைக்காரர் அது வேறொருவர் எடுத்து விட்டதாக சொல்கிறார். கடைசியில் சக்தி எடுத்தது என தெரிய வருகிறது. பிறகு பூஜா உனக்கு புடிச்சவனையே நான் எனக்கானவாக மாத்திட்டேன் என சொல்லி, அந்த புடவையை பூஜா எடுத்துச் செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
அடுத்து எதிர்பாராத விதமாக வெற்றி மற்றும் சக்தி என இருவரும் லிப்டில் செல்ல இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி சண்டை போட்டுக் கொள்கின்றனர். வெற்றி ஆவேசத்தில் லிப்ட் பட்டனை தட்ட லிப்ட் ஸ்ட்ரக் ஆகி பாதியில் நிற்கிறது. அடுத்து சக்தி மயங்கி வெற்றியின் மீது விழுகிறாள்