Meenakshi Ponnunga: வெற்றியை திட்டி அனுப்பிய சக்தி.. பரிதவிப்பில் மீனாட்சி.. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட் இதோ
நான் காதலிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டாய் என சக்தி கோபமாக வெற்றியை திட்டி அவமானப்படுத்தி அனுப்புகிறாள்.அடுத்ததாக யமுனா சக்தியிடம் வெற்றி மட்டும் தவறு செய்யவில்லை நாமும் தான் என சொல்கிறாள்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தி வெற்றியை திட்டி அனுப்பும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
நேற்றைய எபிசோடில் கோயிலில் இருக்கும் சக்தியை பார்க்க வெற்றி வருவதோடு சீரியல் முடிவடைந்தது. இன்றைய எபிசோடில் நான் காதலிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டாய் என சக்தி கோபமாக வெற்றியை திட்டி அவமானப்படுத்தி அனுப்புகிறாள்.அடுத்ததாக யமுனா சக்தியிடம் வெற்றி மட்டும் தவறு செய்யவில்லை நாமும் தான் என சொல்கிறாள். மேலும் நீ வீட்டுக்கு வரணும். அம்மா நிலைமை மோசமாக இருக்கிறது என யமுனா சொல்லி செல்ல இதெல்லாம் பார்த்த பூஜா சந்தோஷமடைகிறார்.
View this post on Instagram
இதனையடுத்து துர்கா வீட்டுக்கு வரும் சக்தியை பார்த்து உள்ளே அழைத்து செல்கிறார். மீனாட்சி சக்தியை பார்த்தவுடன் சமாதானப்படுத்தி அழைத்து சென்று அவரிடம் வெற்றி ஏன் இந்த மாதிரி செய்தான் என்று கேட்கிறார். அதற்கு நடந்ததெல்லாம் சொல்லி வெற்றியை நான் காதலிக்கவில்லை. அவன் தான் தவறாக நினைத்து விட்டான் என்று சக்தி மீனாட்சியிடம் சொல்கிறார். மறுபுறம் வெற்றி திடியனிடம் நான் சக்தி காதலிப்பதாக தவறாக புரிந்து கொண்டேன். தவறு செய்து விட்டேன் என புலம்பி, அங்கிருக்கும் தாஜ்மஹாலை பார்த்து சக்தி சொன்னதெல்லாம் நினைத்து பார்ப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.