Meenakshi Ponnunga: மீனாட்சி வீட்டுக்கு வந்த வெற்றி ... அங்கு நடந்த சூப்பரான சம்பவம்.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், வெற்றி மீனாட்சி வீட்டிற்கு வந்த நிலையில் அவரை தேடி பூஜா வரும் காட்சிகள் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
முன்னதாக தன்னை காப்பாற்றியதற்காக மீனாட்சி, கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் நடக்கும் பூஜைக்கு வெற்றியை அழைக்கிறார். அவர் பூஜைக்கு வரும் விஷயம் தெரிந்து கொண்ட சக்தி மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் சாந்தா, யமுனா, துர்கா மூவரும் சக்தி வெற்றிக்காக சமையல் செய்வதை கிண்டல் செய்கிறார்கள். இன்றைய எபிசோட்டில் மீனாட்சி வீட்டு பூஜைக்கு அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் வெற்றிக்காக காத்திருக்கும் சக்தியின் லவ் ஃபீலிங்கை யமுனாவும் துர்காவும் புரிந்து கொள்கின்றனர்.
View this post on Instagram
இப்படியான நிலையில் வேஷ்டி சட்டையில் மீனாட்சி வீட்டிற்கு வெற்றி வருகிறார். சக்தியும் வெற்றியும் ஒருவரை ஒருவர் கண்ணில் காதலுடன் பார்த்துக் கொள்கின்றனர். பின்னர் அனைவரும் சாமி கும்பிட செல்கின்றனர் . இந்த விஷயம் அறிந்த புஷ்பா பூஜாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறுகிறார். மேலும் அடிக்கடி மீனாட்சி வீட்டிற்கு வெற்றி வருகிறான் என்றும் அவர் சொல்ல பூஜா டென்ஷனாகிறார்.
இதனையடுத்து கோவிலில் பூஜை நடந்து கொண்டிருக்க கோபமாக அங்கு வரும் பூஜா நல்லவர் போல் நடித்து மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு தாலி எடுத்து சாமியிடம் வைத்து பூஜாவின் கையில் மீனாட்சி கொடுத்தார். அதை வாங்கும் பூஜா அந்த தாலியை நழுவ விட சக்தி அதை பிடித்து விடுகிறார். அதனை பூஜா பதற்றமாக இருப்பதால் சக்தி வெற்றியிடம் கொடுக்கிறாள். வெற்றி அதை பத்திரமாக வைத்துக் கொள்ளும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.