Meenakshi Ponnunga: வீட்டுக்கு வருமாறு வெற்றிக்கு அழைப்பு விடுத்த மீனாட்சி..சக்தியின் எண்ணம் மாறுமா?
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், வெற்றிக்கு சக்தி வீட்டில் நடக்கும் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், வெற்றிக்கு சக்தி வீட்டில் நடக்கும் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
சண்டைப் போடும் சக்தி
ரவுடிகளின் பிடியில் சிக்கிய மீனாட்சியை வெற்றி சண்டைப் போட்டு காப்பாற்றுகிறார். அவரை தன் வீட்டில் இரவு தங்க வைக்கும் விஷயத்தை எபிசோடில் கோகிலா மற்றும் சங்கிலி என இருவரும் சக்தியிடம் சொல்ல, அவர் வீட்டுக்கு வந்து சண்டைப் போடுகிறார். அப்போது துர்கா அம்மாவை கொலை நினைத்த ரவுடிகள் இருந்து காப்பாற்றியது வெற்றி தான் என சொல்லி நடந்தவற்றை விளக்குகிறார்.
View this post on Instagram
இதனையடுத்து ரவுடிகளுடனான சண்டையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் வெற்றி, தனக்கு பின்னால் சக்தி நிற்பதை கவனிக்காமல் அவரைப் பற்றி பேசுகிறார்.அதை எல்லாம் கேட்டு கண் கலங்குகிறார் சக்தி. அவளது கண்ணீர் துளி வெற்றியின் மேல் விழுந்ததும், அவர் திரும்ப பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேலும் சங்கிலியை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுரை கூற, முயற்சி செய்யசக்தி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என உறுதியாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
வெற்றிக்கு அழைப்பு
இன்றைய எபிசோடில் கார்த்திக் சாப்பிட மீனாட்சியின் மெஸ்ஸுக்கு வருகிறார். அங்கு யமுனாவுக்கு அவர் பரிசு கொடுக்கிறார். இதன் பின்னர் மீனாட்சி தன் மகள்களுக்கு கார்த்திகை தீபத்திற்கு பூஜை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது மீனாட்சி வெற்றியை பூஜைக்கு அழைக்குமாறு துர்காவிடம் சொல்ல, அவருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆனால் வெற்றி சக்தியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு யோசிக்கிறான். ஆனால் மீனாட்சி தன் உயிரைக் காப்பாற்றிய வெற்றி கண்டிப்பாக பூஜைக்கு வரவேண்டும் என்று சொல்ல, அந்த கோரிக்கையை ஏற்று வெற்றி பூஜைக்கு வருவதாக சொல்கிறான். இதனையடுத்து வெற்றி பூஜைக்கு வரும் விஷயம் தெரிந்து கொண்ட சக்தி மகிழ்ச்சி அடைகிறார். அதேசமயம் மீனாட்சி வெற்றிக்காக அம்மனிடம் வேண்டிக் கொள்கிறாள். இதன்பின்னர் சாந்தா, யமுனா, துர்கா மூவரும் சக்தி வெற்றிக்காக சமையல் செய்வதை கிண்டல் செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.