Karthigai Deepam: ரியா குறித்து வெளிவந்த உண்மை.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்: கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திக் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மது என்பவரைப் பார்க்க அவர் ரியாவின் உண்மையான கணவர் என்பதும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்ற விஷயமும் தெரிய வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவே 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியால் ராஜேஸ்வரி போலீஸிடம் இருந்து தப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஆபீஸ் வரும் கார்த்திக் “தீபாவின் பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு, இதை அப்படியே விட்டுவிடக்கூடாது, இன்னும் நிறைய கவனம் செலுத்தணும்” என்று பிஏவிடம் சொல்கிறான்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மது என்பவரைப் பார்க்க அவர் ரியாவின் உண்மையான கணவர் என்பதும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்ற விஷயமும் தெரிய வருகிறது.
“ரியா காசை நல்லா செலவு பண்ணி ஊர சுத்தணும்னு நினைக்கிறவ, ஆனா நான் சாதாரண வேலை செய்கிறவன். அவளுடைய ஆசைகளை என்னால நிறைவேற்ற முடியல, அதனால ரெண்டு பேரும் பேசி விவாகரத்து வாங்கிக்கிட்டோம்” என்று சொல்கிறான். அத்துடன் கார்த்திக் “போறியா என் அண்ணனோட தான் சுத்திக்கிட்டு இருக்கா, எனக்கு உங்களோட உதவி தேவை” என்று கேட்க அவர்கள் கண்டிப்பாக உதவுகிறேன் என சொல்கிறார்.
பிறகு கார்த்திக் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு நல்ல குரலில் பாட்டு கேட்க திரும்பிப் பார்க்க, ஒரு துப்புரவு பணியாளர் பெண் ஒருவர் பாடுவதை கேட்டு கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். “நீங்க நல்லா பாடுவீங்களா? கச்சேரியில பாட ஆசை இருக்கா? உங்களுக்கு நான் வாய்ப்பு தரேன்” என ஆபிஸ் விசிட்டிங் கார்டை கொடுத்து தன்னை வந்து ஆபீஸில் சந்திக்குமாறு சொல்கிறான்.
ஆபீஸுக்கும் போன் போட்டு “ராணி என்றவங்க வந்து பாப்பாங்க, அவங்கள வச்சு கச்சேரி பண்ணனும்” என்று விஷயத்தை சொல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.