Ethirneechal Serial: கண்முன்னே வந்து ஷாக் கொடுத்த தர்ஷினி: குணசேகரனுக்கு பதிலடி கொடுத்த நந்தினி: எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal: காது குத்துக்கும் குணசேகரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தைரியமாக சொன்ன நந்தினி. வீட்டுக்கு வந்து அனைவரும் ஷாக் கொடுத்த தர்ஷினி. இன்றைய எதிர்நீச்சலில்...
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 16) எபிசோடில் ஜனனி வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து ஆபீஸிலும் குணசேகரன் போன்ற ஒரு கேரக்டர் இருப்பதாக சொல்ல அனைவரும் அதைக் கேட்டு சிரிக்கிறார்கள். அந்த சமயத்தில் கீழே இறங்கி வந்த குணசேகரன் "எங்க போனாலும் குணசேகரன் போல ஒருத்தன் இருப்பான்" என கர்வமாக சொல்கிறார். அவரின் குரலை கேட்டதும் ஜனனி போனை வைத்து விடுகிறாள்.
ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்திடம் இருந்து போன் வருகிறது. உடனே அவர் சொல்லும் இடத்துக்கு வர சொல்கிறார். ஜீவானந்தம் மற்றும் தர்ஷினி ஈஸ்வரிக்காக காத்திருக்கிறார்கள். தர்ஷினியின் மேட்ச் சம்பந்தமாக கவுன்சிலிடம் பேசியதில் அவள் இத்தனை பிரச்சினைகளை சந்தித்து திரும்பியுள்ளதால் மனதளவில் அவள் பாதிக்கப்பட்டு இருப்பாள். அதனால் அவள் கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்ட பிறகு நேரடியாக பைனல் மேட்சில் கலந்து கொள்ளட்டும் என சொல்லி விட்டார்கள் என்று சொல்லி தர்ஷினியை ஈஸ்வரியின் அனுப்பி வைக்கிறார் ஜீவானந்தம்.
காதுகுத்து விழாவுக்கான பத்திரிகையை மீனாட்சி அம்மனிடம் வைத்து அழைப்பிதழ்களை சொந்தபந்தங்களுக்கு வைக்க கிளம்புகிறார்கள். நந்தினியின் சித்தப்பா வீட்டுக்குச் சென்ற இடத்தில் மொய் விருது வைப்பதன் காரணம் பற்றி அவர் விசாரிக்கிறார். பத்திரிகையை வாங்கிப் பார்த்ததும் அதில் குணசேகரன் பெயர் இல்லை என பார்க்கிறார். நந்தினி எவ்வளவு சமாளித்தும் குணசேகரன் தானே உங்கள் வீட்டின் விலாசம் அவர் பெயர் இல்லை என்றால் உங்களுக்கு ஏதாவது வருத்தமா? எனக் கேட்க கடுப்பான கதிர் நந்தினியின் சித்தப்பாவை கத்திவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான கதைக்களம் .