Ethir neechal July 27: உயிருக்கு போராடும் குணசேகரன்... டாக்டர் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சலின் திக் திக் நிமிடங்கள்..!
* பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கும் குணசேகரனுக்கு தீவிர சிகிச்சை * ஜனனியும் ஈஸ்வரியும் ஜீவனந்தத்தை சந்திக்க முடிவு * குணசேகரன் உடல்நிலை குறித்து டாக்டர் கொடுத்த ஷாக் இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் மிகவும் பரபரப்பான கட்டம். சொத்து பறிபோனதையும் ஜீவானந்தம் துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தியதை நினைத்து குழம்பி போய் இருந்தார் குணசேகரன். ஆடிட்டர் வந்த அந்த 40% ஷேரில் இந்த வீடும் இருக்கிறது என்றும் அவன் இதையும் எடுத்து கொள்ளப் போவதாக இன்று தான் தகவல் வந்தது என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்த குணசேகரனுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.
என்ன தான் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவர் மீது மிகுந்த கோபம் இருந்தாலும் அவருக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது என தெரிந்ததும் பதறித் துடித்து போனார்கள். பைக்கில் வைத்து குணசேகரனை கதிரும் கரிகாலனும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்ணை கூட திறக்காமல் மயக்கத்தில் இருக்கும் குணசேகரனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நந்தினி, ஜனனி மற்றும் ஈஸ்வரி, சக்தியுடன் மருத்துவமனைக்கு வந்து விடுகிறார்கள். "நாம போய் ஜீவனாந்தத்திடம் உருண்டு பிரண்டு சொத்தை வாங்கி வரணும் போல இருக்கு அப்ப தான் எழுந்திருப்பாரு போல " என்கிறாள் நந்தினி. ஜனனியும் "ஆமாம் அக்கா நாம அதை தான் செய்யணும்" என்கிறாள். "வா ஜனனி போகலாம்" என ஈஸ்வரி சொல்கிறாள். சக்தியும், ஜனனியும் புரியாமல் பார்க்கிறார்கள்.
கதிர் டென்ஷனாக இருக்க, கரிகாலன் பைத்தியம் மாதிரி ஐஸ் பெட்டிக்கு சொல்லிடவா என்கிறான். அவனை எட்டி மிதித்து கதிர் திட்ட "நீ போடற சத்தத்திலேயே பாதி பேஷண்ட் செத்து போய்டுவாங்க யோவ்" என்கிறான் கரிகாலன். டாக்டர் வந்து கதிரிடமும் ஞானத்திடமும், குணசேகரன் நிலை குறித்து ஏதோ சொல்கிறார். அதை கேட்ட அவர்கள் ஷாக்காகிறார்கள். இது தான் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுக்கான ஹிண்ட்.
உண்மையிலேயே குணசேகரனுக்கு நெஞ்சு வலியா, இல்லை பெண்களை இப்படி ஏமாற்றினால் தான் அவர்கள் போய் ஜீவனாந்தத்திடம் இருந்து சொத்தை மீட்டு வருவார்கள் என பிளான் செய்து நடிக்கிறாரா என்பது ஒரே சஸ்பென்ஸாகவே இருக்கிறது. அப்படி ஈஸ்வரியும் ஜனனியும் போய் ஜீவனாந்தத்திடம் பேசுவதால் ஏதாவது பாசிட்டிவாக நடக்க வாய்ப்பு இருக்கிறதா? இல்லை ஜீவானந்தம் அடுத்த மூவ் என்ன? சொன்ன மாதிரி குணசேகரன் வீட்டையும் ஆக்கிரமிக்க போகிறாரா? இப்படி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்து எதிர்பார்ப்பை உச்சத்திலேயே வைத்துள்ளது எதிர் நீச்சல் தொடர்.