Ethirneechal : தர்ஷனை அடிக்க கை ஓங்கிய கதிர்.. மகனுக்கு சப்போர்ட்டாக நின்ற ஈஸ்வரி.. அதிரடி எதிர்நீச்சல் இன்று
Ethir neechal Sep 16 promo : குணசேகரனை மரியாதை இல்லாமல் தர்ஷன் பேச அவனை அடிக்க எகிறிக்கொண்டு வந்த கதிரின் மூக்கை உடைத்த ஈஸ்வரி. பரபரப்பான எதிர் நீச்சல் இன்றைய ப்ரோமோ.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோட் மிகவும் கலகலப்பாக போனது. நந்தினி சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அனைவரையும் அசத்தி விடுகிறாள். கரிகாலன் வந்து கேட்டதும் "இது பொம்பளைங்க பிரசாதம் அதெல்லாம் நீ பார்க்க கூடாது பார்த்தா கண்ணு போயிடும். அப்புறம் ஹனிமூனுக்கு கண் இல்லாம தான் போகணும்" என சொல்லி மிரட்டி விரட்டி விடுகிறார் விசாலாட்சி அம்மா.
ஈஸ்வரி ஸ்பீச் கொடுக்க சென்ற இடத்தில் வெண்பாவை பார்க்கிறார். டீ ஷாப்பில் ஜீவானந்தத்தை முதலில் சந்தித்த தர்ஷன் அவரிடம் நீங்க ரொம்ப ஹம்பிலா இருக்கீங்க என சொல்கிறன். ஜீவானந்தத்தின் அறிவுரையை கேட்ட பிறகு இனி அம்மா, தங்கை அனைவரையும் நன்றாக பார்த்து கொள்வேன். அவர்களுக்கு சப்போர்ட்டிவாக இருப்பேன் என சொல்கிறான் தர்ஷன்.
வெண்பாவை தான் கஷ்டப்படுத்திவிட்டேன் என ஜீவானந்தம் சொன்னதும் "நீங்க என்ன நல்லா பாத்துக்குறீங்க. அம்மாவும் இருந்தா நல்லா இருந்து இருக்கும். அம்மா இருக்கும் போது அப்பா எங்க கூட இல்ல. இப்போ அப்பா என்னை விட்டு போகுறதே இல்ல ஆனா இப்போ அம்மா எங்களோட இல்ல" என சொல்லி வறுத்த படுகிறாள். "அப்பா மூணு விஷயம் சொல்லி கொடுத்து இருக்கார். நேர்மையா இருக்கணும், தைரியமா இருக்கணும், எந்த பிரச்சினை வந்தாலும் பேஸ் பண்ணனும்" என்கிறாள் வெண்பா. அதை கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
வீட்டுக்கு வந்த அப்பத்தாவுக்கு புத்தகம் ஒன்றை பரிசளிக்கிறாள் நந்தினி. "இது பத்தாது நீ இன்னும் மேலே வரவேண்டும். வாங்கின முதல் சம்பளத்தில் அனவைருக்கும் ஏதாவது செய்யணும் என நினைத்தது பெரிய விஷயம்" என்கிறார் அப்பத்தா. அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் ஈஸ்வரியும் தர்ஷனும் அதில் கலந்து கொள்ள கதிரும் ஞானம் முறைத்து கொண்டே வருகிறார்கள். குணசேகரன் மாடியில் இருந்து இவர்களை பார்க்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அப்பத்தா தர்ஷனிடம் "ஏன் பா காலேஜ் பீஸ் கட்டல" என கேட்கிறார் அப்பத்தா. "அந்த ஆள் காசுல படிக்க விருப்பம் இல்ல" என்கிறான் தர்ஷன். "ஏய் என்ன அந்த ஆள் இந்த ஆள்னு எல்லாம் பேசிகிட்டு இருக்க?" என ஞானம் கேட்க கதிர் தர்ஷனை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வருகிறான்.
கதிரை தடுத்த ஈஸ்வரி "என் பிள்ளைய கேள்வி கேக்குற உரிமை எவனுக்கு கிடையாது நான் சொல்லிட்டேன்" என உரக்க சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட்.