Ethirneechal September 1 : ஐயோ! குணசேகரனுக்கு உண்மை தெரிஞ்சுருச்சே... ஈஸ்வரியை என்ன பாடுபடுத்த போறாரோ? எதிர்நீச்சலில் இன்று பூகம்பம்
ஈஸ்வரியின் அப்பா செய்த காரியத்தால் உடைந்து சுக்குநூறாகிய குணசேகரன். வீட்டில் ஈஸ்வரிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி. இன்றைய எதிர் நீச்சலில் இன்று ஒரு பெரிய பூகம்பம் காத்திருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethir neechal) சீரியலின் நேற்றைய எபிசோடில் வெண்பாவை பார்த்து அழுகிறாள் நந்தினி. ஜீவானந்தத்திடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள். எதையோ சொல்லி ஜனனி சமாளித்து விடுகிறாள். அவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்து அப்பத்தாவின் நோக்கம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது "உங்க மனைவியை கொன்றவன் யார் என தெரிந்தால் என்ன செய்வீங்க?" என கேட்க கொன்று விடுவேன் என்கிறார். அதிர்ச்சி அடைந்த நந்தினி உளற வரும்போது அவளுடைய அப்பா வீட்டுக்கு வந்திருப்பதாக சொல்ல நந்தினியும் ரேணுகாவும் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.
ஆதிரை கரிகாலனோடு ஹனிமூன் செல்ல மாட்டேன் என சொன்னதால் அவளை மிரட்டி விட்டு போகிறார் குணசேகரன். மறுபக்கம் வெண்பா ஈஸ்வரியை பார்த்து "நீங்க என்னுடைய அம்மா மாதிரியே இருக்கீங்க" என சொல்ல ஈஸ்வரி மனசு தாங்காமல் குழந்தையை கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறாள்.
ஜீவானந்தம், ஈஸ்வரியிடம் அப்பத்தாவின் எண்ணம் என்ன? என்பதை பற்றி சொல்கிறார். அதற்கான இழப்பும் அதிகமாக இருக்கும் அதை எல்லாம் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.. என சொல்கிறார். பிறகு ஈஸ்வரியும் ஜனனியும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஈஸ்வரியின் அப்பா குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். "வீட்டுக்கு வந்து ஈஸ்வரியை எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்டான், அவன் தான் ஜீவானந்தம்" என ஈஸ்வரியின் அப்பா குணசேகரனிடம் உளறிவிடுகிறார். அவர் அதை அனைவர் மத்தியிலும் சொல்லவும் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். விசாலாட்சி அம்மா "எங்க வந்து என்ன சொல்றதுன்னு கூட தெரியாதா உங்களுக்கு?" என ஈஸ்வரியின் அப்பாவிடம் கேட்கிறார். நந்தினியின் அப்பாவும் வீட்டில்தான் இருக்கிறார்.
ரேணுகாவும் நந்தினியும் இதை கேட்டு ஒன்னும் புரியாமல் பார்க்கிறார்கள். குணசேகரனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்ததுபோல அப்படியே நிற்கிறார். அப்படியே வாசலில் வந்து உட்காருகிறார். ஈஸ்வரியும் ஜனனியும் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி ரேணுகா ஈஸ்வரிக்கு ஃபோன் மூலம் சொல்ல ஈஸ்வரி டென்ஷனாகிறாள். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
எதற்காக ஈஸ்வரியின் அப்பா இந்த உண்மையை குணசேகரனிடம் சொல்ல வேண்டும்? இனி ஈஸ்வரியின் நிலை என்ன? உடைந்துபோவாரா அல்லது எரிமலையை போல கொந்தளிப்பாரா குணசேகரன்? ஈஸ்வரி சொல்லப்போகும் உண்மை என்ன? பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல் (Ethir neechal) இன்றைய எபிசோட்.