மேலும் அறிய

Ethir neechal August 24 episode : ஆத்தாடி ஆத்தா! அப்பத்தாவை காணவில்லை... பதறும் குணசேகரன்... இது கூட ஆக்ட்டிங்காக இருக்குமோ?

* ஜனனியை அப்பத்தாவை பார்க்கவிடாமல் விரட்டிவிடும் குணசேகரன்* அப்பத்தாவை காணவில்லை என வீட்டை சல்லடை போட்டு தேடும் குணசேகரன்நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனி அப்பத்தாவை பார்ப்பதற்காக வேக வேகமாக மாடிக்கு செல்கிறாள். ஆனால் அவளை அப்பத்தாவை பார்க்க குணசேகரன் அனுமதிக்கவில்லை. வழக்கமாக குணசேகரன் பேசுவதை எல்லாம் ஞானம் பேசினான். "உன் மேல எல்லாரும் வெறியாக இருக்கிறோம். சும்மா இருந்த அப்பத்தாவை பேசிப்பேசி நீ தான் கெடுத்து வைச்சு இருக்க. எந்த உரிமையில நீ இந்த வீட்டுக்குள்ள வர. எங்க தம்பியையே நாங்க ஒதுக்கி வைச்சுட்டோம் அப்படி இருக்கையில் உனக்கு என்ன இந்த வீட்ல வேலை. என்னோட தம்பி பொண்டாட்டி என சொல்லிக்கிட்டு தானே இந்த வீட்டுக்குள்ள வந்த அப்போ அவனுக்கு மேலுக்கு முடியாம இருக்கும் போது எங்க போன" என கேட்கிறான் ஞானம்.

"அப்பத்தாவை எல்லாம் பார்க்க முடியாது. கையெழுத்து எல்லாம் வாங்கியாச்சு. இனிமேல் உன்னால எதுவும் செய்ய முடியாது" என்கிறார் குணசேகரன். "வலுக்கட்டாயப்படுத்தி நீங்க வாங்கின கையெழுத்து செல்லாது. தப்புக்கு மேல தப்பு செய்றீங்க. இது நல்லதுக்கு இல்லை" என சொல்லிவிட்டு திரும்பிவிடுகிறாள் ஜனனி.

Ethir neechal August 24 episode : ஆத்தாடி ஆத்தா! அப்பத்தாவை காணவில்லை... பதறும் குணசேகரன்... இது கூட ஆக்ட்டிங்காக இருக்குமோ?

இரவு அப்பத்தாவுக்கு சாப்பாடு கொண்டு போன நந்தினியையும், ரேணுகாவையும் திட்டி விரட்டி விடுகிறான் கதிர். "இவர்கள் தான் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்து இருப்பார்கள்" என ஜனனி  சொல்ல "எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது" என்கிறாள் நந்தினி. "மனைவியின் சடங்குகளை முடித்த பிறகு இதற்கு காரணமானவர்களை பழி வாங்குவேன் என மிகவும் கோபமாக ஜீவானந்தம் சொன்னார். சொத்துக்காக உயிரையே எடுக்கும் அளவுக்கு துணிந்து விட்டார்கள்" என்கிறாள் ஜனனி. 

"உனக்கு இந்த பிரச்சினை எல்லாம் வேண்டாம். நீ எங்களுக்காக தானே இந்த வீட்டுக்கு வந்த. எங்களுக்கு எல்லாம் ஒரு வழியை காட்டிட போதும் நீ உன்னோட வாழ்க்கையை பாரு. இந்த சொத்தும் வேண்டாம் எதுவும் வேண்டாம். நாளைக்கு நீ உன்னையும் கொல்ல தயங்க மாட்டார்கள். பிறகு உன்னுடைய பெற்றோர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம். வேண்டாம் மா" என ரேணுகா மிகுந்த மனவருத்தத்துடன் ஜனனியிடம்  சொல்கிறாள். ஆனால் ஜனனி விடாப்பிடியாக "முடியாது. அப்பத்தாவின் இழப்புக்கும், ஜீவானந்தத்தின் இழப்புக்கும் ஒரு முடிவு தெரியாமல் நான் விடமாட்டேன். இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் இப்போது கிடையாது" என துணிச்சலாக சொல்கிறாள் ஜனனி. 

அடுத்த நாள் காலை குணசேகரன் அப்பத்தாவின் ரூமுக்கு சென்று பார்க்கையில் அப்பத்தாவை காணவில்லை. பதறி போய் குணசேகரனும் ஞானமும் வீடு முழுக்க தேட அப்பத்தாவை எங்கேயும் காணவில்லை. கதிர் எங்கோ வெளியில் சென்று இருப்பதாக ஞானம் கூறுகிறான். ஞானத்தை ஜனனி வீட்டுக்கு சென்று பார்க்க சொல்கிறார் குணசேகரன். எங்கு தேடியும் அப்பத்தாவை காணவில்லை. 

Ethir neechal August 24 episode : ஆத்தாடி ஆத்தா! அப்பத்தாவை காணவில்லை... பதறும் குணசேகரன்... இது கூட ஆக்ட்டிங்காக இருக்குமோ?
வீட்டில் உள்ள பெண்களிடம் அப்பத்தாவை பார்த்தீங்களா என கேட்கிறார் குணசேகரன். "உங்க தம்பியை கூட தான் காணும். அந்த பக்கம் சம்பவம் பண்ண அனுப்பிவிட்டு திசை திருப்ப பாக்குறீங்களோ. உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க" என நக்கலாக சொல்கிறாள் ரேணுகா. 

"யாரும் அப்பத்தாவை பார்க்க கூடாது பேசக்கூடாது என சொல்லிட்டு நீங்க தான் ரூமுக்குள் வைத்து பூட்டி வச்சீங்க இப்போ காணும்னா... என்ன பண்ணீங்க அப்பத்தாவ" என கேட்கிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Embed widget