Ethir Neechal Aug 21 Promo: அநியாயமாக பறிபோன ஒரு உயிர்... ஜனனிக்கு தெரிந்த உண்மை... எதிர் நீச்சலில் சோகமான கட்டம்!
* அப்பத்தாவை ரூமில் போட்டு அடைத்து வைத்த குணசேகரன்* மனைவியின் இறுதி சடங்குகளை செய்த ஜீவானந்தம்இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ஹிண்ட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்குவதற்காக குணசேகரன் போலீஸ் இன்ஸ்பெக்டரை வீட்டுக்கு வரவைத்துள்ளார். அப்பத்தா நான் ஜீவானந்தத்தை பார்க்காமல் கையெழுத்து போட முடியாது என எவ்வளுவு வைராக்கியமாக இருந்தாலும் குணசேகரனிடம் அது எடுபடவில்லை. தாராவை காட்டி அப்பத்தாவை மிரட்டி குணசேகரன் கையெழுத்து வாங்கிவிடுகிறார். கையெழுத்தை போட்டாலும் அப்பத்தா குணசேகரனை பார்த்து நக்கலாக சிரிக்கிறார்.
மறுபக்கம் ஜீவானந்தம் வீட்டில் வளவன் ஆட்கள் புகுந்து ஜீவானந்தம், கயல்விழி மற்றும் வெண்பாவை தாக்குகிறார்கள். ஜீவானந்தம் ஒரே ஆளாக அனைவருடனும் சண்டையிடுகிறார். ஜனனி உள்ளே வந்து தன்னால் முடிந்த வரையில் அவர்களை எதிர்கிறாள்.
வளவனும் கதிரும் ஜன்னல் வழியாக நின்று கொண்டு இருக்கிறார்கள். வளவன் துப்பாக்கியால் சுட அது ஜீவானந்தம் மனைவி கயல்விழி மீது குண்டு பாய அவள் ரத்தவெள்ளத்தில் செத்து கிடக்கிறாள். இதைப் பார்த்த அடியாட்கள் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். கதிரையும் வளவன் இழுத்து செல்கிறான். மனைவி இறந்ததை பார்த்த ஜீவானந்தமும் மகள் வெண்பாவும் கதற ஜனனி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
குணசேகரன் அப்பத்தாவை ரூமில் அடைத்து வைத்துவிட்டார். அப்பத்தா தூங்கிக் கொண்டு இருக்கிறார். வாசல் வெளியிலேயே குணசேகரன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். நந்தினியும் ரேணுகாவும் "ஏன் ரூமுக்குள்ள போட்டு அடைச்சு வைச்சு இருக்கீங்க... எதுக்கு?" எனக் கேட்கிறார்கள். "குணசேகரன பத்தி எல்லாம் உங்களுக்கு யாருக்கும் தெரியாது... பேசாம நில்லுங்க" என்கிறார் குணசேகரன்.
மறுபக்கம் ஜீவானந்தம் தனது மனைவி கயல்விழியின் உடலை தகனம் செய்கிறார். அந்த இடத்தில் ஜனனியும் அழுது கொண்டே நிற்கிறாள். ஜீவானந்தத்தை பார்த்து "இப்போ ஒரு விஷயம் தெளிவா புரியுது. நீங்க தப்பானவர் இல்ல" என ஜனனி சொல்கிறாள். "ஆனா இப்போ கூட உனக்கு தெரிஞ்சது முக்கால்வாசி உண்மைகள் தான்" என்கிறார் ஜீவானந்தம். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
கையெழுத்தை தான் வாங்கிவிட்டாரே, பிறகு எதற்கு அப்பத்தாவை ஜீவானந்தம் ரூமுக்குள் அடைத்து வைக்க வேண்டும்? ஜீவானந்தத்தை புரிந்து கொண்ட ஜனனி எடுக்க போகும் அடுத்த ஸ்டேப் என்ன? மிகவும் பரபரப்பாக நகர்ந்த இந்த கதைக்களத்தில் திடீரென இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மனைவியை இழந்த ஜீவானந்தம் அடுத்து என்ன செய்யப்போகிறார். இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் விடை கிடைக்கும். காணதவறாதீர்கள்.